தீபாவளிக்கு வருகிறது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல்..!

தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள படம், கேம் சேஞ்சர். இந்த படத்தின் முக்கிய அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Oct 24, 2023, 02:46 PM IST
  • ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம், கேம் சேஞ்சர்.
  • இப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது.
  • இப்பாடல் வெளியாவது எப்போது தெரியுமா?
தீபாவளிக்கு வருகிறது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல்..!  title=

தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள படம், கேம் சேஞ்சர். இது, ராம் சரணின் 15வது படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு பல 1 வருடத்திற்கும் மேலாக நடைப்பெற்று வருகிறது. 

ஷங்கர்-ராம் சரண் கூட்டணி:

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார், ஷங்கர். 2 வருடத்திற்கு ஒரு படம் என்று எடுத்தாலும், அதை பிரம்மாண்டமாக ரசிகர்களுக்கு கொடுப்பார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 2.0. இதையடுத்து அவர் ‘இந்தியன் 2’ படத்தில் பிசியாகி விட்டார். இப்படத்தின் வேலைகளும் கடந்த 3 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகின்றது. இதையடுத்து அவர் தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கைக்காேர்த்தார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

கேம் சேஞ்சர் திரைப்படம்:

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கியாரா அத்வானி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத், நீயுசிலாந்து, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடைப்பெற்றது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது. 

ஜர்கண்டி:

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் சிங்கிள், தசராவிற்கு வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தீபாவளிக்கு கேம் சேஞ்சர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜர்கண்டி’ பாடல் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள போஸ்டரில் ராம் சரண் குர்த்தா அணிந்து கொண்டு நிற்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | நடிகர்கள் பட்டாள அறிவிப்புடன் ‘தளபதி68’ பூஜை வீடியோ வெளியானது

அரசியல் த்ரில்லர்:

கேம் சேஞ்சர் படம், அரசியல் த்ரில்லர் கதையை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஷங்கர் ஏற்கனவே ஜென்டில் மேன், முதல்வன், இந்தியன், இந்தியன் 2 உள்ளிட்ட சில அரசியல் த்ரில்லர் படங்களை இயக்கியுள்ளார். அந்த படங்கள் அனைத்தும் வெற்றியும் பெற்றுள்ளன. அந்த வைகயில் கேம் சேஞ்சர் படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேம் சேஞ்சர் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தில் ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களிலும வேலைகளையும் ஷங்கர் ஒரே நாளில் பார்த்து வருகிறார். 

ராம் சரணுக்கு காயம்:

கேம் சேஞ்சர் படத்தின் ஹீரோ ராம் சரணுக்கு அப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது மூக்கில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ராம் சரண் பத்து நாட்களுக்கு ரெஸ்டில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்ததால், அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.  மேலும், சில நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் அக்டோபர் 2ஆவது வாரம் முதல் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஷங்கரின் அடுத்தடுத்த படங்கள்..

இயக்குநர் ஷங்கர், கேம் சேஞ்சர் படத்துடன் சேர்த்து இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் வேலைகளும் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த வரும் பொங்கலுக்கு திரை விருந்தாக இப்படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | அர்ஜூனின் மகளுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்! ‘இந்த’ நடிகரின் மகன்தான் மாப்பிள்ளை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News