வாத்தி பாடலை பாடி மாணவர்களை குஷிப்படுத்திய ஜீவி பிரகாஷ்

கோவையில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு சென்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், மாணவர்கள் முன்பு வாத்தி பாடலை பாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2023, 02:43 PM IST
வாத்தி பாடலை பாடி மாணவர்களை குஷிப்படுத்திய ஜீவி பிரகாஷ் title=

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சி வரும் மே மாதம் 27 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் நடிகரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்  இசைக் கச்சேரி நடத்துகிறார். இதையொட்டி கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லோகோ அறிமுகம், டிக்கெட் விற்பனை துவக்கம்  நடை பெற்றது. இதில் கிருஷ்ணா  கல்லூரி  குழுமம் நிர்வாக இயக்குனர் மலர்விழி  மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்  கலந்து கொண்டனர். 

முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜி.வி.பிரகாஷ், நான் ஸ்கூல்  படிப்பில் பாஸாகி விடுவேன், அதேபோல் தான் கல்லூரியிலும்  இருந்தேன் எனக் கூறினார். மேலும் எனக்கு எல்லா ஆர்டிஸ்ட்  பிடிக்கும் எனவும்  என்னுடைய செலிப்ரிட்டி மாணவர்கள் தான். சிக்கு புக்கு பாடல் மூலம் எனது வாழ்க்கையை தொடங்கினேன். சின்ன வயதில் அந்த பாடலை பாடினேன் என்றார். 

மேலும் படிக்க | Vidya Balan: அறைக்கு அழைத்த இயக்குநர்: பல ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டிவிட்ட அஜித் பட நடிகை

பின்னர் தற்போது வாழ்த்தி திரைப்படத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ள ‘ஒரு தலை காதல் தந்தேன்’ என்ற பாடல் பாடி  மாணவர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டளை பெற்றார். தொடர்ந்து  யாத்தி யாத்தி என்ற பாடலும் பாடினார். வெள்ளாவி வைத்து தான் வெளுத்தார்களா கீ போர்டு மூலம் இசையமைத்து பாடலும் பாடினார். ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் வரும் மே மாதம் 27" ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு நாம் சந்திப்போம் என தெரிவித்து மேடையில் இருந்து பின்னர் விடைபெற்றார். 

மேலும் படிக்க | Oscars 2023: நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட உள்ள அமெரிக்க நடிகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News