இயக்குநர் பிறந்த நாளில் NGK படக்குழுவினரின் மாஸ் சர்ப்ரைஸ்!

இயக்குநர் செல்வராகவன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக NGK படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated: Mar 5, 2019, 02:51 PM IST
இயக்குநர் பிறந்த நாளில் NGK படக்குழுவினரின் மாஸ் சர்ப்ரைஸ்!

இயக்குநர் செல்வராகவன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக NGK படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது.

கடந்த மாதம் 14ம் தேதி  NGK படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு தணிக்கைக் குழு U சான்றிதழ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான “ட்ரீம் வாரியார்” ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக அவர்களது டுவிட்டர் பக்கத்தில் NGK படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.