இணையத்தை அதிரவைக்கும் "இரும்புத்திரை" டீசர்!

வரும் ஜனவரி 26-ஆம் நாள் இப்படம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Last Updated : Dec 30, 2017, 07:44 PM IST
இணையத்தை அதிரவைக்கும் "இரும்புத்திரை" டீசர்!

விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "இரும்புத்திரை". பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் படத்தினை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்கிறார். 

படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீசரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் ஜனவரி 26-ஆம் நாள் இப்படம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

More Stories

Trending News