நடிகை திரிஷா-வின் டிவிட்டர் கணக்கு முடக்கம்

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பின் உறுப்பினராக உள்ள திரிஷாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. 

Last Updated : Jan 15, 2017, 01:04 PM IST
நடிகை திரிஷா-வின் டிவிட்டர் கணக்கு முடக்கம் title=

சென்னை: ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பின் உறுப்பினராக உள்ள திரிஷாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. 

போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என திரிஷா குறிப்பிட்டிருந்தார். 

இருப்பினும் அவரது டிவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவே மீண்டும் பிரச்சனை வெடித்தது. 

இந்நிலையில் டிவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார். இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

பீட்டா உறுப்பினர் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா முக்கிய உறுப்பினராக உள்ளார். 

திரிஷாவுக்கு எதிராக பதிவு தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்காதது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பீட்டா அமைப்பின் உறுப்பினராக திரிஷா இருப்பதால் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர். 

இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்த திரிஷா:-

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. தற்போது நான் என் நிலைபாட்டை தெளிவுபடுத்துகிறேன். பெண்களை அவமரியாதை செய்வதுதான் தமிழர்களின் கலாச்சாரமா? தமிழ் கலாச்சாரம் பற்றி பேச வெட்கபடவேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் நடிகை திரிஷாவின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தை, மர்மநபர்கள் யாரோ முடக்கியதாகவும், அதில் திரிஷாவை போல கருத்துகளை பரப்பியதாகவும் தெரிவித்திருந்தார். 

அதனால் டிவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார். இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News