சந்தியா ராகம்: சர்ப்ரைஸ் கொடுத்த ஜானகி... திகைத்து நின்ற சந்தியா, கடுப்பாகும் மாயா!

சர்ப்ரைஸ் கொடுத்த ஜானகி... திகைத்து நின்ற சந்தியா, கடுப்பாகும் மாயா - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 19, 2023, 11:55 AM IST
  • ஜானகி மற்றும் சந்தியா என இருவரும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர், சந்தியா ராகம்.
  • இனி நடக்க இருப்பது என்ன? இங்கே பார்ப்போம்.
சந்தியா ராகம்: சர்ப்ரைஸ் கொடுத்த ஜானகி... திகைத்து நின்ற சந்தியா, கடுப்பாகும் மாயா! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியாராகம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பித்துள்ள தொடர், சந்தியா ராகம். இந்த தொடரில் ஜானகி மற்றும் சந்தியா என இரு சகோதரிகளுக்குள்ளும் இடையே இருக்கும் பாச போராட்டமும் அவர்களின் குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளுமே இந்த தொடரில் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த தொடர், அதற்குள்ளாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தினசரி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகும் தொடர்களின் லிஸ்டில் இந்த தொடரும் இணைந்துள்ளது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் ஜானகியை அமெரிக்காவுக்கு வழி அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியாராகம் என்ற தொடரில் இன்று மனோ ஜானகியை அழைத்து செல்லும் போது ஜானகி கோவில் அருகே நிறுத்த சொல்லி கீழே இறங்கி சாமி கும்பிட அங்கு வரும் புவனேஷ்வர் என்ன ஜானகி அமெரிக்கா எல்லாம் போற போல என்று நக்கலாக பேசி நீ வரதுக்குள்ள உன் பொண்ணை என் அண்ணன் பையனுக்கு கட்டி வச்சி அவளை என் வீட்டு வேலைக்காரியாக்கிடுவேன் என்று சொல்ல மனோ நீ போ அத்தை நான் பார்த்துக்கறேன் என்று ஜானகியை அழைத்து செல்கிறான். 

மேலும் படிக்க | திதி கொடுக்க வந்த தமயந்தி - நளதமயந்தி சீரியல் அப்டேட்!

இங்கே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கும் சந்தியா ஒரே சந்தோஷமாக இருப்பதை போல உணர மாயா அதை பார்த்து விஷயம் என்ன என்று கேட்க என் அக்கா வர போறான்னு நினைக்கிறன் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே வீட்டின் கதவு திறக்கப்பட ஜானகி வந்து அங்கு நிற்க சந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். அக்காவை கட்டி அணைத்து பாசத்தை பொழிந்து வீட்டிற்குள் அழைத்து வர மாயாவுக்கு இது எதுவும் பிடிக்காமல் போகிறது. 

ஜானகி மற்றும் சந்தியா என இருவரும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஜானகி ஒரு பாக்ஸை எடுத்து கொடுக்க அதில் வளையல் இருப்பதாய் பார்த்து சந்தியா திருமணத்தின் பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: சண்முகத்துக்கு பரணி வைத்த 100 நாள் சேலேஞ்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் சௌந்தரபாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News