ஜியோசினிமா செய்த மாஸ்டர் பிளான்! அமேசான், நெட்பிலிக்ஸ்க்கு பெரிய அடி!

ஜியோ சினிமா சந்தாவை அறிமுகப்படுத்திய பிறகு இந்திய பார்வையாளர்களுக்கு பிரீமியம் ஹாலிவுட் உள்ளடக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு என்பிசி யுனிவர்சல் மீடியாவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 31, 2023, 09:15 AM IST
  • ஜியோசினிமாவில் Downton Abbey, Suits மற்றும் The Office போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை காணலாம்.
  • ஒரு வருடத்திற்கு சந்தா கட்டணம் ரூ.999 செலுத்த வேண்டும்.
  • ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் ஜியோசினிமா செயலியை பார்க்கலாம்.
ஜியோசினிமா செய்த மாஸ்டர் பிளான்! அமேசான், நெட்பிலிக்ஸ்க்கு பெரிய அடி! title=

ரிலையன்ஸின் ஜியோசினிமா, ஏப்ரல் மாதத்தில் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியுடன் ஒரு கூட்டாண்மையைத் தொடங்கிய பின்னர், இந்தியாவில் போட்டியாளர்களான நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசானைப் பெற மற்றொரு பெரிய ஸ்ட்ரீமிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  இதுவரை பயனர்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்து வந்த பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா தற்போது அதன் பிரீமியம் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது தற்போது அதன் பயனர்களுக்கு அதிகளவிலான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.  ஜியோசினிமா பிரீமியம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பயனர்கள் இப்போது ஹெச்பிஓ போன்ற முன்னணி ஸ்டுடியோக்களில் இருந்து இன்னும் பிரத்தியேகமான நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும்.  சந்தாவை அறிமுகப்படுத்திய பிறகு நிறுவனம் அதன் ஃபிளாட்பார்மில் இந்திய பார்வையாளர்களுக்கு பிரீமியம் ஹாலிவுட் உள்ளடக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு என்பிசி யுனிவர்சல் மீடியாவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் படிக்க | ‘இந்த அதிசயத்த பாருங்களேன்..’ஒரே பள்ளியில் பயின்ற பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் மனைவிகள்!

ஜியோசினிமாவின் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு Downton Abbey, Suits மற்றும் The Office போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கான அணுகலை வழங்கும் பல ஆண்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக இரு நிறுவனங்களும் ஒரு கூட்டு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.  சக்ஸஷன் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்காக ஜியோசினிமா வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியுடன் உள்ளடக்க ஸ்ட்ரீமிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு புதிய ஒப்பந்தம் வந்துள்ளது.  ரிலையன்ஸ் தனது ஜியோசினிமா ஸ்ட்ரீமிங் தளத்தில் பிரபலமான உள்ளடக்கங்களான, விளையாட்டு உள்ளடக்கம் போன்ற பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும், இந்த விளையாட்டு உள்ளடக்கங்களில் பெரும்பாலும் வெளிநாட்டு வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும்.  ஜியோசினிமாவின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இந்த செயலியை இயக்க முடியும்.  அதாவது உங்கள் கணக்கை நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

தற்போதைய நிலவரப்படி, ஜியோசினிமா அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரீமியம் திட்டத்தை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் இதில் ஒரு வருடத்திற்கு சந்தா கட்டணம் ரூ.999 செலுத்த வேண்டும்.  பிரீமியம் திட்டம் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான முழு அணுகல், உயர்தர வீடியோ மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பார்க்கும் திறன் உள்ளிட்ட பல நன்மைகளை வாடிக்கைகையாளர்களுக்கு வழங்குகிறது.  ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தை வாங்க, ஜியோசினிமா இணையதளத்திற்குச் சென்று, சப்ஸ்க்ரைப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.  சந்தா செலுத்துவதன் மூலம் நீங்கள் எந்த சாதனத்திலும் இருந்து ஜியோசினிமா செயலியை இயக்கிக்கொள்ளலாம். ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டங்கள் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற தளங்கள் வழங்குவதை விட மலிவானதாக இருக்கும் என்று முன்னர் செய்திகள் வெளியானது.   ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த கட்டண முறையின் மூலம் சந்தையில் மிகப்பெரிய போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.  நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி தளங்கள் இனிமேல் ஜியோசினிமாவோடு போட்டிபோடும். இந்த புதிய கூட்டாண்மை மூலம், ஜியோசினிமா அதிக பயனர்களை ஈர்க்கும் மற்றும் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக அதன் நிலையை உயர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Maamannan: மாமன்னன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News