Maamannan: மாமன்னன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

Maamannan Audio Launch: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஜூன்1ஆம் தேதி நடைபெறும் இந்த விழா, நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : May 30, 2023, 12:13 PM IST
  • மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.
  • சென்னையில் நடைபெற உள்ளது.
  • ஏ.ஆர்.ரஹ்மான் நேரலையில் பாட உள்ளார்.
Maamannan: மாமன்னன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா? title=

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள படம், மாமன்னன். இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இசை வெளியீட்டு விழா:

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த விழா லைவ் கான்சர்ட்டாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழா, நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இதில் படத்தின் பாடல்களை நேரலையில் பாட உள்ளார். மிகப்பெரிய அளவில் நடத்தப்பட இருக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில், ட்ரைலரும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | மாவீரன் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்: உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

பலத்த வரவேற்பினை பெற்ற பாடல்கள்:

ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகின. அதில், ராசா கண்ணு என்ற பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளும், வடிவேலுவின் குரலும் ரஹ்மானின் இசையும் மனதை வருடும் வகையில் உள்ளதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பல நாட்களாக வடிவேலுவின் கம்-பேக்கை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் சிறந்த ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராசா கண்ணு பாடல், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸகளை கடந்து 7 மில்லியன் வியூஸ்களை எட்ட உள்ளது. 

முதன்முறையாக நடனமாடிய ஏ.ஆர்.ரஹ்மான்..

சில நாட்களுக்கு முன்னர் மாமன்னன் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியானது. குழந்தைகளுக்கு பிடித்தார் போல, படத்தின் வரிகளும் இசையும் இடம் பெற்றிருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. லிரிக்கல் வீடியோவாக வெளியான இப்பாடலில், மழலைகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றினார். கூலாக கூலிங்க் க்ளாஸ் மாட்டிக்கொண்டும் டீ-சர்ட் போட்டுக்கொண்டும் சிறு பிள்ளை போல குழந்தைகளுடன் குழந்தையாக க்யூட் நடனமாடினார், ஏ.ஆர்.ரஹ்மான். அவர் போட்டது, சிறிய டான்ஸ் ஸ்டெப்பாக இருந்தாலும் ரசிகர்கள் அதை கொண்டாடினர். இந்த பாடல், வெளியானது முதல் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது பல ஆயிரம் லைக்ஸ்களை கடந்து, 3 நாட்களில் 3 மில்லியன் வியூஸ்களை இப்பாடல் கடந்துள்ளது. 

ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக உள்ளது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளையும் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவையும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இப்படம், இந்த வருடத்தில் வரும் பக்ரீத் பன்டிகையை ஒட்டி  (ஜூன் 29) வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. பிற மாரி செல்வராஜ்ஜின் படங்கள் போலவே இந்த படமும் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கூறும் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | இயக்குநர் டூ நடிகர்..கதையின் மூலம் கே.எஸ் ரவிகுமார் கம்-பேக் கொடுப்பது எப்போது..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News