‘இந்த அதிசயத்த பாருங்களேன்..’ஒரே பள்ளியில் பயின்ற பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் மனைவிகள்!

Anushka Sharma: இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் மனைவிகள் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தோனியின் மனைவியான சாக்‌ஷியும் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மாவும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : May 30, 2023, 02:31 PM IST
  • தோனியின் மனைவி சாக்‌ஷி, விராட்டின் மனைவி அனுஷ்கா இருவரும் பள்ளி தோழிகள்.
  • அசாமில் இருந்த போது இருவரும் ஒரே பள்ளியில் பயின்றுள்ளனர்.
  • இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
‘இந்த அதிசயத்த பாருங்களேன்..’ஒரே பள்ளியில் பயின்ற பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் மனைவிகள்! title=

இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் மனைவிகள் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தோனியின் மனைவியான சாக்‌ஷியும் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மாவும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், “விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா..?” என்றும் “அன்றே கணித்தனர் சாக்‌ஷியும் அனுஷ்காவும்..” என்றும் கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.

ஐ.பி.எல் 2023:

பல திருப்பங்களுடனும் பரபரப்பான ஆட்டங்களுடனும் ஒரு வழியாக இந்த வருடத்தின் ஐ.பி.எல் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. கடைசி போட்டியில் குஜராத் அணியினை எதிர்த்த சென்னை அணி சில பால்களில் பல ரன்களை குவித்து வெற்றி கண்டு கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் குஷியில் உள்ள ரசிகர்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினர் குறித்த தகவல்களையும் பரப்பி வருகின்றனர். அப்படி ஒரு தகவல்தான் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | Maamannan: மாமன்னன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

தோனி-சாக்‌ஷி & விராட்-அனுஷ்கா:

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக தோனி-சாக்‌ஷி மற்றும் விராட்-அனுஷ்கா ஆகியோர் உள்ளனர். தங்களது கணவர் களத்தில் இறங்கி சிக்ஸர் மழை குவிக்கையில் அவர்களை பால்கனியில் இருந்து சியர் செய்து கொண்டிருப்பர், சாக்‌ஷியும் அனுஷ்காவும். தோனி-சாக்‌ஷி ஜோடி 2010ஆம் ஆண்டு மணம் முடிக்க, விராட்-அனுஷ்கா கடந்த 2017ஆம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் நுழைந்தனர். அனுஷ்கா-சாக்‌ஷி குறித்த தகவல்தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஒரே பள்ளியில் படித்தவர்கள்!

அனுஷ்காவும் சாக்‌ஷியும் ஒரே பள்ளியில் படித்து நெருங்கிய தோழிகளாக வளர்ந்தவர்களாம். சொல்லப்போனால், தோனி-விராட் நட்பை விட, இவர்களின் நட்பு மிகவும் பழையதாம். அனுஷ்கா சர்மாவின் தந்தை அஜய் குமார் வேலை காரணமாக அசாமில் தங்கியிருந்த போது அனுஷ்கா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துள்ளார். ஆச்சரியத்தக்க வகையில், நம்ம தல தோனியின் மனைவி சாக்‌ஷியும் அதே பள்ளியில்தான் பயின்றுள்ளார். அவர்கள், பள்ளி பருவத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. 

கன்ஃபார்ம் செய்த அனுஷ்கா!

அனுஷ்கா சர்மா கூட இந்த தகவலை ஒரு நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “நானும் சாக்‌ஷியும் அசாமில் உள்ள ஒரு சிறிய ஊரில்தான் தங்கியிருந்திருக்கிறோம். ஒரு நாள் அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் இந்த தகவல் எங்கள் இருவருக்கும் தெரியவந்தது” என்று கூறியுள்ளார். மேலும், சாக்‌ஷி ஃபேன்சி ட்ரெஸ் போட்டியில் கலந்து கொண்டபோது தேவதை போல உடை உடுத்தியிருந்த புகைப்படம் தன்னிடம் உள்ளதாகவும் அனுஷ்கா கூறினார். மேலும், அந்த போட்டியின் போது அவர் மாதுரி எனும் போல வேடம் போட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்…

ஏற்கனவே சி.எஸ்.கே கோப்பையை வென்ற மகிழ்ச்சியல் உள்ள ரசிகர்கள் இந்த தகவலை கேட்டவுடன் இன்னும் குஷியாகிவிட்டனர். சிறுவயதில் எடுக்கப்பட்ட சாக்ஷி மற்றும் அனுஷ்காவின் புகைப்படங்களை ஆர்வத்துடன் இணையத்தில் பதிவிட்டு இந்த தகவலை அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | வீடியோ ஆதாரத்தை காட்டிய சக்தி..விடுதலையான வெற்றி..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News