விக்ரம் வெற்றியால் உயரும் கமலின் சம்பளம் - கொடுக்குமா லைகா?

விக்ரம் படத்தின் வெற்றியால் கமலின் சம்பளம் உயர்ந்திருப்பதால், அதனை கொடுக்க இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2022, 02:28 PM IST
  • பெரும் வசூலைக் குவித்த விக்ரம் திரைப்படம்
  • 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது
  • கமல் தற்போது எதிர்பார்க்கும் சம்பளம் எவ்வளவு?
விக்ரம் வெற்றியால் உயரும் கமலின் சம்பளம் - கொடுக்குமா லைகா? title=

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் தாறுமாறான வெற்றியை பதிவு செய்துள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம், கமலின் மார்க்கெட்டை புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. 100 கோடிக்குள் செலவழித்து எடுக்கப்பட்ட விக்ரம், ஒட்டுமொத்தமாக 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மேலும் ஓடிடி விற்பனையிலும் சுமார் 120 கோடிக்கு படம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஒட்டுமொத்தமாக கூட்டி கழித்து பார்க்கும்போது விக்ரம் படம் பெரும் வசூல் சாதனையை படைத்திருக்கிறது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பெரும் வசூலைக் குவித்த படமாக மாறியிருக்கிறது விக்ரம்.

இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் கமல்ஹாசன், அடுத்ததாக பிரச்சனையால் தடைபட்டு நிற்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்கான அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் கூறினார். அதில் அவர் பேசும்போது, இந்தியன் 2 படத்தின் வேலைகளை ஆரம்பிக்க லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இயக்குநர் சங்கரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் விரைவில் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். ஏனென்றால், இயக்குநர் சங்கர் தற்போது ராம்சரணின் ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?

அதேநேரத்தில் லைகா நிறுவனம், இந்தியன் 2 படத்தின் வேலைகளை தொடங்க ஆர்வமாக இருந்தாலும், சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அனைவரும் தாங்கள் கமிட்டாகி இருக்கும் பட வேலைகளை முடித்த பின்னரே இந்தப் படத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு சிக்கல் என்றாலும், இந்தியன் 2 தொடங்கப்பட்டபோது இருந்த மார்க்கெட் நிலவரமும், இப்போது இருக்கும் மார்க்கெட் நிலவரமும் வேறாக இருக்கிறது.

இதனால் நடிகர், நடிகைகள் தங்களின் சம்பளத்தை உயர்த்த வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, விக்ரம் படத்தின் ரிலீஸூக்கு முன்பு வரை தோராயமாக 35 கோடி ரூபாய் கமல்ஹாசன் ஊதியமாக பெற்றதாக கூறப்படும். இப்போது அவரின் மார்க்கெட் புதிய உயரத்துக்கு சென்றுள்ளது. அதனால், 100 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கவும் வாய்ப்புகள் இருக்கிறதாம். இதனையெல்லாம் சரிகட்ட லைகா என்ன செய்யப்போகிறது என்பதை சினிமா வட்டாரங்கள் ஆர்வத்தோடு கவனித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | வயசாச்சுனா லவ் பண்ணகூடாதா...பாக்கியலட்சுமி கோபி கவலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News