இன்று திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சிக்கு வந்தார் கமல்ஹாசன். திருச்சியில் வகிக்கும் டிராபிக் போலீஸ் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இறந்த உஷாவின் அம்மா மற்றும் அவரது சகோதரருக்கு ஐந்து லட்ச ரூபாயும், உஷாவின் கணவருக்கு ஐந்து லட்ச ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அ.தி.மு.க-வின் உண்ணாவிரதம் போலியானது -கமல்!
Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan met the family members of late Mrs. Usha, offered condolences for their loss and fulfilled the promise *made by him earlier*.#MakkalNeedhiMaiam pic.twitter.com/rQlvXM96m4
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 4, 2018
முன்னதாக, கடந்த மார்ச் 7-ம் தேதி திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ராஜா மற்றும் அவரது மனைவி உஷாவும் பைக்கில் சென்றனர். அப்பொழுது, காவல் ஆய்வாளர் காமராஜ் பைக்கை நிறுத்தினார். ஆனால் ராஜா நிறுத்தாமல் சென்றதால், பின்னாடியே பைக்கில் சென்று ராஜாவின் வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். இதனால் பைக்கில் இருந்து தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் ராஜாவின் மனைவி உஷா உயிரிழந்தார்.
மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி.. திருச்சியில் சந்திப்போம்
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சி சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், உஷாவின் குடும்பத்தாருக்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். அதன் படி இன்று உஷா குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் -கமல்
திருச்சியில் மோட்டார் பைக் விபத்தில் மரணமடைந்த உஷாவின் குடும்பத்தினருக்கு,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் 10 லட்ச ரூபாய் நிதியுதவியை அறிவித்திருந்தார்.
அவர் அந்தத் தொகையை, இன்று திருச்சியில் உஷா குடும்பத்தினருக்கு கொடுத்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.#MakkalNeedhiMaiam— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 4, 2018