கரீனா கபூரா? சமந்தாவா? சேலையை சிறப்பாக காணப்பட்டது யார்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூர் அணிதிருந்த சேலையை போலவே அணிந்துள்ளார். இந்த சேலையில் யார் சிறப்பாக தோற்றம் அளித்துள்ளார் என்று இணையத்தில் அவர்களது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Updated: Feb 13, 2020, 10:24 AM IST
கரீனா கபூரா? சமந்தாவா? சேலையை சிறப்பாக காணப்பட்டது யார்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூர் அணிதிருந்த சேலையை போலவே அணிந்துள்ளார். இந்த சேலையில் யார் சிறப்பாக தோற்றம் அளித்துள்ளார் என்று இணையத்தில் அவர்களது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படத்தின், தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இந்த படத்தை பிரேம் குமார் இயக்கி உள்ளார். படம் பிப்ரவரி 7 ஆம் தேதியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகளில் சமந்தா தீவிரமாக செயல்பட்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக ஜானு பட புரமோஷனில் மும்முரமாக இருப்பதால், அதற்காக பங்குபெறும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சமந்தா ஜானுவாகவே தன்னை முன்னிருத்துகிறார். சமந்தா ஆஃப் ஒயிட் புடவையில் ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து வந்தார். அதில் பறவை பறப்பது, செடிகள் அசைவது என இயற்கை எழில் கொஞ்சும் டிசைன் தான் அந்த புடவையின் அழகு. புடவைக்கு வெஸ்டர்ன் டச் கொடுக்க ஹால்டர் நெக் பிளவுஸ் அணிந்திருக்கிறார்.

இந்த புடவை ஏற்கனவே கரீனா கபூர் அணிந்துள்ளார். அந்த புடவையில் கரீனா ’பெபோ’ என எழுத்துக்களை பதித்துள்ளார். புடவையின் மெட்டீரியல்தான் மாற்றமே தவிற இருவரும் ஒரெ மாதிரியான புடவையையே அணிந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த சேலையில் யார் சிறப்பாக தோற்றம் அளித்துள்ளார் என்று இணையத்தில் அவர்களது ரசிகர்கள் கேள்வி எழுப்பி அவர்களின் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.