தீபா பாடுவதை எப்படி தடுப்பது என கூட்டு சதி செய்யும் மாயாவும் ரூபஸ்ரீயும்!

Latest Episode Of Karthigai Deepam: கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2024, 03:40 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
  • பாடுவதை தடுக்க சதி
  • சதியை முறியடிக்கப் போவது யார்?
தீபா பாடுவதை எப்படி தடுப்பது என கூட்டு சதி செய்யும் மாயாவும் ரூபஸ்ரீயும்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் ரூபாஸ்ரீ ஏற்பாடு செய்த இன்கம் டேக்ஸ் ரைடில் இருந்தும் கார்த்திக் தப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Zee News as a Preferred Source

கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில், கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி நீ எதுக்கு ரோடுல இறங்கி ரவுடிகளுடன் சண்டை போடுற, தர்ணா செய்யுற? இதனால் நம்ம குடும்ப கவுரவம் தான் கெட்டு போகும் என்று சொல்ல கார்த்திக் இல்லமா நம்ம குடும்பத்தில் இருந்து ஒரு பாடகி உருவாகினால் அது நமக்கு பெருமை தான் என்று சொல்கிறான். 

மேலும் படிக்க | Lover Review: டாக்ஸிக் காதலுக்கு எடுத்துக்காட்டு..‘லவ்வர்’ படம் எப்படியிருக்கு? திரை விமர்சனம் இதோ!

அடுத்ததாக ரூமுக்குள் இருக்கும் தீபாவிற்கு கார்த்திக் காரில் இருந்து ஒரு கிஃப்ட்டை கொண்டு வந்து கொடுக்க அது கல்யாண போட்டோவாக இருப்பதை பார்த்து தீபா சந்தோசப்படுகிறாள்.

மறுபக்கம் மாயாவும் ரூபஸ்ரீயும் கூட்டு சேர்ந்து தீபா பாடுவதை எப்படி தடுப்பது என்று யோசிக்கின்றனர். கடைசியில் ஐஸ்வர்யாவை வைத்து ஒரு பிளானை போட்டு ஒரு மயக்க மருந்து மாத்திரையை கொடுத்து அனுப்ப ஐஸ்வர்யா அதை கொண்டு வந்து அவளது அம்மாவிடம் கொடுக்கிறாள். 

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் இந்த விஷயத்தை பண்ண மாட்டேன் - ஜீவி பிரகாஷ்

பிறகு தீபாவுக்காக மீனாட்சி ஸ்பெஷலாக பாலை காய்ச்சி கொண்டிருக்கும் போது அபிராமி கூப்பிட மீனாட்சி வெளியே வர இந்த நேரம் பார்த்து கிச்சனில் நுழையும் ஐஸ்வர்யாவின் அம்மா அந்த மாத்திரையை பாலில் கலந்து விடுகிறாள். பிறகு மீனாட்சி இந்த பாலை கொண்டு போய் தீபாவுக்கு கொடுக்கிறாள். 

தீபாவும் பாலை குடிக்க போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? தீபா பாலை குடிப்பாளா? இல்லையா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Kavin: கவினுக்கு ஜாேடியாக நடிக்கும் நயன்தாரா!? இதை எதிர்பாக்கவே இல்லையே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News