மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு

Keerthy Suresh Net Worth 2024 : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தான் தற்போது பார்க்க போகிறோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 11, 2024, 04:28 PM IST
  • தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.
  • கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு விவரம்.
மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு title=

Actress Keerthy Suresh Net Worth : தேசிய விருது வென்ற தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக வலம்வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பின் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், முதல் முறையாக தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானார். தமிழில், ’இது என்ன மாயம்’ என்கிற படம் தான் நடிகை கீர்த்தி சுரேஷின் முதல் படமாகும். இன்று தமிழ்-தெலுங்கு மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவரது தாய் மேனகா தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி ஆகியோருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு மவுசு உள்ளதோ, அதே போல 80 மற்றும் 90களில் மேனகாவிற்கும் மவுசு இருந்தது. தனது தாய் தந்தை மூலம் 5 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் தலைக்காட்டியவர் கீர்த்தி.

தேசிய விருது:
நடிகை கீர்த்தி சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) என்ற படத்தில் நடித்திருந்தார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சாவித்ரியையே கண் முன் நிறுத்தியதாக கீர்த்திக்கு பல வழிகளிலும் பாராட்டு குவிந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதுவே இவருக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. இது, கீர்த்தியின் திரை வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | படுக்கையறையில் படுத்தவாறு போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! புகைப்படங்கள் வைரல்..

பாலிவுட்டில் கால் பதித்த கீர்த்தி:
தென் திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வரும் கீர்த்தி, தற்போது பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார். அதன்படி இவர் தற்போது அட்லீ குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம், தெறி. இந்த படம், தற்போது இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பேபி ஜான் என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நாயகன் வருண் தவான் நடிக்கிறார். அதேசமயம் இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

கீர்த்தியின் அடுத்தடுத்த படங்கள்:
இதற்கிடையில் இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஆகஸ்டு 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிவரா ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் சைரன் படம் ரிலீஸானது. இந்த [படத்திற்கு மக்கள் மத்தியல் நல்ல வரவேற்று பெற்றது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு:
இந்நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தான் தற்போது பார்க்க போகிறோம். அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 45 கோடி வரை இருக்குமாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார். இதுமட்டுமின்றி சென்னையில் இருக்கும் இரவின் வீட்டின் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தும் கார்களின் விவரம், Brand-new Volvo S90 - ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld - ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 - ரூ. 81 லட்சம்,Toyota Innova Crysta - ரூ. 25 லட்சம் ஆகும். 

மேலும் படிக்க | Oscar 2024 List : ஆஸ்கர் விருதுகளின் வெற்றியாளர்கள் யார்? எந்த படத்திற்கு என்ன விருது கிடைத்தது? முழு லிஸ்ட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News