KGF2 படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு..! பீஸ்ட் டிரெய்லர்?

KGF2 படத்தின் டிரெய்லர் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2022, 01:17 PM IST
  • மார்ச் 27 ஆம் தேதி டிரெய்லரை வெளியிடும் கே.ஜி.எஃப் 2
  • பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது?
  • பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 இரண்டு படங்களும் ஏப்ரல் 14 -ல் ரிலீஸ்
KGF2 படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு..! பீஸ்ட் டிரெய்லர்? title=

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் கேஜிஎஃப் 2. இந்த படத்தின் முதல் பாகம் ஆக்ஷன் பிளாக் பஸ்டர் ஹிட்டைக் கொடுத்தது. இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் வரவேற்பை பெற்ற கேஜிஎஃப் திரைப்படத்தின் 2 ஆம் பாகம், முதல் பாகத்துக்கு சற்றும் குறைவில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின், டிரெய்லர் எப்போது வெளியிடப்படும்? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

மேலும் படிக்க | விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான தகவல்!

அவர்களின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது படக்குழு. கேஜிஎப் 2 படத்தின் டிரெய்லர் மார்ச் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை ஹோம்பல் பிலிம்ஸ் (Hombale Films) டிவிட்டரில் அறிவித்துள்ளது. புயலுக்கு முன் இடி வருவதைப் போல் கேஜிஎப் ரிலீஸூக்கு முன் டிரெய்லரைக் காண தயாராகுங்கள் என மாஸ் வசனத்தில் டிரெய்லர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

கேஜிஎப் திரைப்படம் வெளியாகும்போது தமிழில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. பாலிவுட்டில் அமீர்கானின் லால் சிங் சத்தா வெளியாகிறது. இதனால், 3 படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆஃபீஸ் மோதல் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. மூன்று படங்களின் மோதலில் தப்பிக்கப்போகும் படம் எது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இப்போதே எழத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பீஸ்ட் VS கேஜிஎஃப் என்ற நிலை உருவாகியுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டாரான பிருத்திவி ராஜ் அண்மையில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு மெய்சிலிர்த்துபோனார். மேலும், கேரளாவில் படத்தை விநியோகிக்கும் உரிமையையும் அவர் பெற்றுள்ளார் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | பொள்ளாச்சி சம்பவம் தான் எதற்கும் துணிந்தவன் படமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News