ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி?

கேஜிஎப் படத்தில் ராக்கிபாயின் காதலியாக வந்த ஸ்ரீநிதி ஷெட்டி, அடுத்தடுத்து இறங்கும் கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்கள் சொக்கிப்போய் உள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 16, 2022, 02:43 PM IST
  • கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஸ்ரீநிதி
  • கோப்ரா படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்
  • இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்
ராக்கி பாயை இப்படித்தான் மயக்கினாரா ஸ்ரீநிதி ஷெட்டி? title=

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியான கேஜிஎப் திரைப்படம், வசூல் வேட்டையை நடத்தியது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மெஹா ஹிட் அடித்தது. வசூலில் ஆயிரம் கோடியைக் கடந்து இந்திய அளவில் பாக்ஸ் ஆஃபீஸ் கிங்காக முத்திரை பதித்தது. நடிகர் யாஷ் முதல் பாகத்தில் ராக்கி பாயாக மிரட்டியது போலவே இரண்டாம் பாகத்திலும் நடிப்பில் மெய்சிலிர்க்க வைத்தார். எந்த இடத்திலும் முதல் பாகத்துக்கு சற்றும் குறையாத வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அமர்களப்படுத்தியிருந்தார்.

மேலும் படிக்க | விக்ரமை பார்த்து பொறாமைப்படும் இயக்குநர்

அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த அவரின் நடிப்பையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். ஸ்ரீநிதி ஷெட்டியின் காஸ்டியூமும் கேஜிஎப் 2 படத்தில் சூப்பராக இருந்தது. ஆனால், படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து கவர்ச்சிப் புகைப்படங்களை இறக்கி வருகிறார் அவர். நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்திய ஸ்ரீநிதியின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. 

 

மாடலாக இருந்த அவர், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சூப்பர் நேஷனல் அழகி பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அதே ஆண்டில் நடைபெற்ற மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு, அந்தப் போட்டியிலும் பட்டத்தைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு கேஜிஎப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பாகங்களிலும் நடித்த அவர், தமிழில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படத்தின் மூலம் என்டிரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

மேலும் படிக்க | ஒருவழியாக அமீருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த பாவனி...ரசிகர்கள் மகிழ்ச்சி!

அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், திடீரென சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம். அதற்கேற்ப கவர்ச்சி படங்களாக வெளியிட்டு, எந்த கதாப்பாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பதையும் மறைமுகமாக சொல்லி வருகிறார் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இப்படி தான் ராக்கி பாய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருப்பாரோ? என வழக்கம்போல் கதைகளை கதைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News