அமலா பால் குழந்தையின் பெயர் ‘இலாய்’! இதற்கு இப்படியொரு அர்த்தமா?

Actress Amala Paul Baby Boy Ilai Name Meaning : தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக விளங்கிய அமலா பால், தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தையின் பெயருக்கு இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2024, 10:18 AM IST
  • அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது
  • இந்த குழந்தையின் பெயர் இலாய்
  • இதற்கு பின்னாள் இருக்கும் அர்த்தம்
அமலா பால் குழந்தையின் பெயர் ‘இலாய்’! இதற்கு இப்படியொரு அர்த்தமா?  title=

Actress Amala Paul Baby Boy Ilai Name Meaning : தமிழ் சினிமாவில், ‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமானவர், அமலா பால். இந்த படம் பெரிதாக வெளியில் தெரியவில்லை என்றாலும் இவரது நடிப்பு பலரை ஈர்த்தது. இதனால்தான் அவருக்கு ‘மைனா’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர், கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 

காதல்-திருமணம்-விவாகரத்து!

கோலிவுட் காதல் ஜோடிகளுள் பிரபலமானவர்களாக விளங்கியவர்கள் அமலா பால்-ஏ.எல்.விஜய். இவர் இயக்கிய தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தில் நடித்திருக்கிறார் அமலா பால். அப்படி நடிக்கையில் இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள, விரைவில் திருமணம் செய்து கொண்டனர். 2014ஆம் ஆண்டில் கரம் பிடித்த இவர்கள், 3 வருடங்களிலேயே அதாவது 2017ஆம் ஆண்டிலேயே விவாகரத்து பெற்று கொண்டனர். இந்த விவாகரத்திற்கு காரணம், பரஸ்பரம் இருவருக்கும் புரிதல் இல்லாததுதான் என்று கூறப்பட்டது. 

விஜய், விவாகரத்து பெற்ற பின் 2019ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. அமலா பால், சில வருடங்கள் சிங்கிளாக இருந்தார். 

காதலும் இரண்டாவது திருமணமும்..

நடிகை அமலா பால், ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஜகத், அமலா பாலுக்கு ப்ரப்போஸ் செய்யும் வீடியோ, இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அதற்கு சில வாரங்களுக்கு பின்னர் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரள மாநிலம் கொச்சியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வெகு சில உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பெரிய பிரபலங்கள் யாரும் இந்த திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.

மேலும் படிக்க | வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் அமலா பால்!

குழந்தை பிறந்தது..

நடிகை அமலா பால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவித்தார். இதையடுத்த அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. தான், இந்த கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை குழந்தை பிறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அமலா பால் இது குறித்து எதுவும் கூறவில்லை. இதையடுத்து இது வெறும் வதந்தி என்று உறுதியானது. 

தற்போது, தன் குழந்தையை வீட்டிற்கு கொண்டு வரும் வீடியாேவை வெளியிட்டிருக்கிறார் அமலா பால். இவருக்கு, குழந்தை இந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி பிறந்திருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் அமலா பாலின் பதிவில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த குழந்தைக்கு ‘இலாய்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 

அர்த்தம் என்ன? 

‘இலாய்’ என்பது ஹீப்ரு மொழியை சேர்ந்ததாம். இதற்கு, தமிழில் சொர்க்கம் அல்லது மேலுலகம் என்று அர்த்தமாம். இதை குறிக்கும் வகையில்தான், அமலா பால் தனது மகனுக்கு பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | அமலா பாலின் 2வது கணவர் ஜகத் தேசாய் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News