Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

Prasanth Second Marriage : நடிகர் பிரசாந்திற்கு  இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மையா? முழு விவரம், இங்கே.   

Written by - Yuvashree | Last Updated : Apr 9, 2024, 01:12 PM IST
  • நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா?
  • மணப்பெண் யார்?
  • பிரசாந்த் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா? title=

Prasanth Second Marriage : தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக இருந்தவர், பிரசாந்த். திரையுலகில் இருந்து கடந்த சில காலமாக விலகி இருந்த இவர், தற்போது GOAT படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாப் ஹீரோவாக இருந்த நடிகர் பிரசாந்த்:

கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் யார் டாப் ஹீரோக்களாக இருந்தார்களோ, அவர்கள்தான் இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் கிங் ஆகவும், அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட நடிகர்களாகவும் இருக்கின்றனர். அப்படி டாப்பில் இருப்பவர்கள்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய். ஆனால், ஒரு காலத்தில் தான் நடித்துக்கொடுத்த அனைத்து படங்கள் மூலமாகவும் ஹிட் கொடுத்தவர், பிரசாந்த். 

நடிகரும் திரைப்பட இயக்குநருமான தியாகராஜனின் மகனான இவர், 1990ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். பார்ப்பதற்கு சிறுவன் போல இருந்தாலும், துருதுரு செயல்களாலும், துடிப்பான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார். தமிழ் மட்டுமன்றி, சில தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் பிரசாந்த் நடித்திருக்கிறார். 

முதல் திருமணம்:

நடிகர் பிரசாந்திற்கு செப்டம்பர் 2005ஆம் ஆண்டு, தொழிலதிபரின் மகள் கிரகலக்‌ஷ்மியுடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணம், 3 ஆண்டுகளுக்குள்ளாகவே விவகாரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் பிரசாந்தின் தந்தை, திருமணம் முடிந்த 1 மாதத்திற்குள்ளாகவே அந்த பெண், தனது தாய்-தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், அந்த பெண் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும், அப்பெண் பிரசாந்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் பின்னர் இந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருக்கிறார். 

இரண்டாவது திருமணமா? 

நடிகர் பிரசாந்த், இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக முன்னரே கூறப்பட்டது. அவர் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம், வெகு நாட்களாக ரிலீஸாகாமல் நிலுவையில் உள்ளது. இந்த படம் வெளியானவுடன் இவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது தந்தை தியாகராஜனும் தனது மகனின் திருமணம் குறித்து பேசுகையில், படம் வெளியானவுடன் அதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். இந்த பெண் யார் என்பது குறித்த தகவல் எதுவும் இன்றளவும் வெளியாகவில்லை.

பிரசாந்த் காதலித்த பெண்..

தியாகராஜன், ஒரு முறை தான் கொடுத்திருந்த பேட்டியில் பிரசாந்த் காதலித்த பெண் குறித்து பேசினார். அப்போது, பிரசாந்த் திருமணம் செய்து கொண்ட பெண்ணை தானும் தனது மனைவியும்தான் சேர்ந்து பார்த்து வைத்தாகவும், அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்திருந்தால் தன் மகன் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருந்திருப்பான் என்றும் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | Summer Memes : “எரியுதுடி மாலா..” தமிழகத்தில் தாளாத வெயில்-இணையத்தில் நெட்டிசன்களின் மீம் கலாட்டா!

51 வயதாகும் பிரசாந்த்:

நடிகர் பிரசாந்திற்கு, தற்போது 51 வயதாகிறது. தனது விவாகரத்திற்கு பிறகு காதல் வதந்திகளில் சிக்காமல் இருந்த அவருக்கு, தற்போது திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கான செய்தாகத்தான் இருக்கிறது. 

GOAT படம் மூலம் திரையுலகிற்குள் ரீ-எண்ட்ரி:

நடிகர் பிரசாந்திற்கு 2011ஆம் ஆண்டிற்கு பிறகு வெளியான படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை தேடி தரவில்லை. இந்த நிலையில்தான், அவர் தற்போது நடிகர் விஜய்யுடன் GOAT படத்தில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் நடிகர் விஜய்க்கு பாேட்டி நடிகராக பார்க்கப்பட்டவர், இப்போது அவரது படத்தில் நடிப்பது கொஞ்சம் வேதனையாக இருப்பதாக பிரசாந்தின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Pushpa 2 The Rule: இணையத்தில் சாதனை படைத்துள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 டீசர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News