நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று டிவிட் செய்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, சசிகுமார், விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு, மீனா, சுருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி ஆகியோர் தியாகராய நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு நடிகர் சூர்யா டிவிட்டரில்,
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!#Elections2019 #GoVoteTN @ECISVEEP #ECISVEEP @TNelectionsCEO pic.twitter.com/AcABcHc8zi
— Suriya Sivakumar (@Suriya_offl) April 18, 2019
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.