Vikram Movie Update: விக்ரம் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

விக்ரம் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 6, 2021, 11:00 AM IST
  • .அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
  • நடிகர் கமலின் (Kamal Haasan) 232 வது படம் ஆகும்.
  • கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டம்
Vikram Movie Update: விக்ரம் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

சமீப காலங்களில் அதிகமாக டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவராவார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து அசால்டாக அசுர வெற்றிகளை கொடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ். 

லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) தயாரிப்பில் சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' படம் ரசிகர்களுக்கு இடையில் அபார வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் கனகராஜின் இயக்கம் இதில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. மாஸ்டர் படத்தை அடுத்து, உலக நாயகன் நடிக்கும் ‘விக்ரம்’ (Vikram Movie) படத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் நடிகர் கமலின் (Kamal Haasan) 232 வது படம் ஆகும். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

ALSO READ | 'ஆரம்பிக்கலாங்களா?’ என ட்வீட் போட்டு, கமலின் விகரம் பற்றிய அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது விக்ரம் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், கைதி மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ALSO READ | கமலில் "விக்ரம்" படத்தில் இருந்து நடிகர் ராகவா லாரன்ஸ் விலகல்? எனத் தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News