திருமணச் செலவைத் திருப்பிக் கேட்கும் Netflix? - நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்?

திருமண ஒளிபரப்பு உரிம ஒப்பந்தம் தொடர்பாக நெட்ப்ளிக்ஸுக்கும் நயன்தாரா தரப்புக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 20, 2022, 02:25 PM IST
  • நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.
  • திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் பெற்றது
  • பணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி நயன்தாராவுக்கு நோட்டீஸ் எனத் தகவல்
திருமணச் செலவைத் திருப்பிக் கேட்கும் Netflix? - நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்? title=

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த நபர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டது.  திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் அத்திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததுதான்.

ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்ற நெட்ப்ளிக்ஸ், திருமணத்தின் பெரும்பாலான செலவுகளையும்கூட கவனித்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. குறிப்பாகத் திருமணத்துக்கு வந்திருந்தோர் தங்குவதற்கான ஓட்டல் அறைகள், திருமண விழா டெக்கரேஷன், மேக்-அப், பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு நெட்ப்ளிக்ஸ்தான் ஸ்பான்ஸர் எனச் சொல்லப்படுகிறது. 

 

 
 
 
 

அதுமட்டுமல்லாமல், பலா பிரியாணி முதல் பல்வேறு வகையான டிஷ்களுடன் அரங்கேறிய சாப்பாட்டுச் செலவுகளையும்கூட அந்நிறுவனம்தான் பார்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சாப்பாட்டுக்காகத் தலைக்கு 3500 ரூபாய் வீதம் நெட்ப்ளிக்ஸ் செலவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
நயன்தாராவின் திருமணம் தொடர்பாக ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே அன்றைய தினம் வெளியான நிலையில் இத்திருமண வீடியோ எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. 

ஆனால்  சுமார் ஒரு மாத காலம் ஆன பிறகும் கூட வீடியோ வெளிவராதது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் நெட்பிளிக்ஸுக்கும் நயன்தாரா தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் தொடர்பாக சில மனக்கசப்புகள் உருவானதாகவும் அதனால்தான் இந்தத் தாமதம் எனவும் கூறப்பட்டது. 

 

இதற்கிடையே திருமணம் நிகழ்ந்த முதல் மாதத்தைக் கொண்டாடும் விதமாக, திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். ரஜினி ஷாருக்கான் உள்ளிட்டோருடனான  மணமக்களின் அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின.

திருமண வீடியோ வெளியாகாத நிலையில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அந்தப் புகைப்படங்கள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின. நெட்ப்ளிக்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது எனவும் அதனால்தான் விக்னேஷ் சிவன் அந்தப் புகைப்படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்திருக்கிறார் எனவும் பேசப்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் இது தொடர்பாக அதிகாரப்பூர்மாக எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அதாவது, ஒப்பந்தத்தை ரத்து செய்ய நெட்ப்ளிக்ஸ் முன்வந்திருப்பதாகவும், அதன்படி திருமணத்துக்கு தங்கள் தரப்பிலிருந்து செலவிடப்பட்ட 25 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி நயன்தாரா தரப்புக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முடிவுக்கு வந்த நயன் - விக்கி ஹனிமூன்! - பின்னணியில் யார் தெரியுமா?

இதனால் இந்த விவகாரம் தற்போது அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. நெட்ப்ளிக்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் பட்சத்தில் நயன்தாராவின் திருமணம் வேறு ஏதேனும் தளத்தில் வெளியாகுமா அல்லது தொலைக்காட்சி ஏதேனும் விலைக்கு வாங்கி ஒளிபரப்புமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | விபத்து விழுங்கிய 'வியப்பழகி'! செளந்தர்யா Birthday special!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News