பிரபல தமிழ் நடிகரை மணக்கும் நடிகை நிக்கிகல்ராணி?

பிரபல தமிழ் நடிகரை  நிக்கிகல் ராணி இந்த ஆண்டு திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:31 AM IST
பிரபல தமிழ் நடிகரை மணக்கும் நடிகை நிக்கிகல்ராணி? title=

 ஜீவி பிரகாஷின் டார்லிங் படத்தில் நடித்த நடிகை நிக்கி கல்ராணி, அதன்பிறகு ’மரகதநாணயம், யாகாவராயினும் நாகாக்க’ போன்ற படங்களில் நடித்தார். இதுதவிர மற்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.  இப்போது மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நிக்கிகல் ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அவர்கள் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | திரையரங்கில் தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்? உண்மை என்ன?

2020 ஆம் ஆண்டு ஆதி தந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிக்கிகல் ராணி, பின்னர் ஜோடியாக ஹைதராபாத்தில் உலாவந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. இதனால், அவர்களின் காதல் கிசுகிசு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. அதனைப் பற்றி இருவரும் இதுவரை வாய்திறக்கவில்லை. காதல் கிசுகிசுவை மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

இதனிடையே, இவர்கள் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக லேட்டஸ்டாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக அறிவிப்பை விரைவில் ஆதியும், நிக்கிகல்ராணியும் அறிவிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரவான் மற்றும் ஆடுபுலி உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் ஆதி நடித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா – மிரட்டல் லுக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News