’எனக்கு அவரு வேணும் ப்ளீஸ்’ பிக்பாஸிடம் டீல் பேசும் நிவாஷினி

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அசீமை எலிமினேட் செய்துவிட்டு, அசல் கோலாறை மீண்டும் கொண்டு வருமாறு பிக்பாஸிடம் டீல் பேசியிருக்கிறார் நிவாஷினி.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 2, 2022, 06:18 PM IST
’எனக்கு அவரு வேணும் ப்ளீஸ்’ பிக்பாஸிடம் டீல் பேசும் நிவாஷினி title=

பிக்பாஸ் சீசன் 6 தற்போது 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் விஜே மகேஷ்வரி, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோருடன் பாடகர் அசல் கோலாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவர், பின்னர் படிப்படியாக விளையாட தொடங்கினார். இவர் ஜாலியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில்மிஷமாக விளையாட தொடங்கினார்.

மேலும் படிக்க | ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதுரியா யார் தெரியுமா?

குயின்சியிடம் அவர் காட்டிய சீண்டல் விளையாட்டுகள் எடுபடாத நிலையில், நிவாஷினியுடன் ஜோடி சேர்ந்தார். தினமும் அவருடைய ஏதாவதொரு சில்மிஷ வீடியோ வெளியாகிக் கொண்டே இருந்தது. இணையத்திலும் அவருடைய ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அசல் கோலாறின் ஆட்டம் கோளாறாக இருப்பதால், அவர் எலிமினேஷனுக்கு வர வேண்டும் என காத்திருந்தனர். நெட்டிசன்கள் எதிர்பார்த்து போலவே எலிமினேஷனில் வந்ததால், அசல் கோலாறுக்கு யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டார்.

அப்போதே அசல் கோலார் வீட்டில் இருக்கும் என கூறிய நிவாஷினி, இப்போது மீண்டும் பிக்பாஸிடம் டீல் ஒன்றை பேசியிருக்கிறார். அதில், "பிக்பாஸ் நாம ஒரு டீல் பேசலாமா?. இந்தவாரம் அசீமை எலிமினேட் செய்துவிட்டு, அசல் கோலாறை மீண்டும் உள்ள கொண்டு வாங்க. நான் அவங்ககிட்ட பேசல, அசல் ஃபுல்லா கேமில் ஃபோகஸ் பண்ணட்டும். ஒகே வா.." என கேட்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் நெட்டிசன்கள், ஆசீம் என்ன பாவம் பண்ணாரு என கிண்டலாக கேட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ’அசல் கோலார் போகக்கூடாது’ அடம்பிடித்த நிவாஷினி - பிக்பாஸ் போட்ட கணக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News