பிக்பாஸால் நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு சிக்கல்?

நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதால் அவர் நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' போன்ற படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 05:04 PM IST
  • பிக்பாஸ்-ல் கமலுக்கு பதில் சிம்பு.
  • பத்து தல படம் மேலும் தாமதம்.
  • வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பும் இன்னும் முடியவில்லை.
பிக்பாஸால் நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு சிக்கல்? title=

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ்.  இதன் முதல் ஐந்து சீசன்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகின்றது.  இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார், தற்போது அவருக்கு படப்பிடிப்பு பணிகள் இருப்பதால் தற்காலிகமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார்.

மேலும் படிக்க | Bigg Boss Ultimate-ல் இனி சிலம்பாட்டம்: கமலுக்கு பதில் வருகிறார் சிம்பு!!

ஏற்கனவே பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் போது கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிலையில், இப்போதும் கமலுக்கு பதிலாக, ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்க்கபார்க்கப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வெளியானது.  இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாகவும் விஜய் தொலைக்காட்சியில் அதிகாரபூர்வ விளம்பரங்களும் ஒளிபரப்பானது.

 

சமீபத்தில் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவிற்கு வரிசையாக படங்கள் குவிந்த நிலையில், தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதால் இவர் கமிட்டான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற படங்களின் படப்பிடிப்பு பணிகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் சிம்பு பல கெட்டப்புகளில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல படத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் நடிக்கின்றனர்.  இப்படத்தின் போஸ்டர் மற்றும் சிம்புவின் பிறந்தநாளன்று வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிம்பு பிக்பாஸ் சென்றதால் படப்பிடிப்பு பணிகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | மலையாள பட ரீமேக்கில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News