ராதே ஷியாம் படத்தை ஓடிடியில் வெளியிடும் இரண்டு நிறுவனங்கள்!

ராதே ஷியாம் படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஏப்ரல் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2022, 02:38 PM IST
  • ராதே ஷியாம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியானது.
  • 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • விரைவில் ஹிந்தி மொழியில் வெளியாக உள்ளது.
ராதே ஷியாம் படத்தை ஓடிடியில் வெளியிடும் இரண்டு நிறுவனங்கள்! title=

கடந்த மார்ச் மாதம் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான 'ராதே ஷியாம்' திரைப்படம்  பல மொழிகளில் வெளியாகி எதிலுமே எதிர்பார்த்த அளவு வெற்றியை அடையவில்லை.  ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் வெறும் ரூ.214 கோடியை மட்டுமே வசூல் செய்தது.  பாகுபலி மற்றும் சாஹோ போன்ற படங்கள் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திய நிலையில், இந்த ராதே ஷியாம் படம் அவருக்கு சரிவை ஏற்படுத்தியது.  திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகிறது.

radheshyam

மேலும் படிக்க | இந்த இரண்டு ஸ்டார் ஜோடிகள் விரைவில் திருமணம்!

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கிறது.  இதனை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளம் ஸ்ட்ரீமிங் செய்வதாக அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.  பிரபாஸ் ரசிகர்கள் பலர் இப்படம் ஹிந்தியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படாததை எண்ணி கவலையடைந்தனர்.  அதனை தொடர்ந்து இப்படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்றும் தேடினர்.  அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் வெளியாகாததையடுத்து இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகுமா என்று எதிர்பார்த்தனர், ஆனால் அது நடக்கவில்லை.

மேலும் இப்படம் சோனிலிவ் இயங்குதளத்தில் வெளியாகுமா என்று எதிர்பார்த்தனர், அதுவும் நடக்கவில்லை.  ராதே ஷியாம் ஜீ5  மற்றும் நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் ஏப்ரல்-14ம் தேதி வெளியாகுகிறது.  இந்த காதல் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் சத்யராஜ், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி, முரளி சர்மா, சத்யன், ஜெயராம் பாக்யஸ்ரீ போன்ற பலர் நடித்திருந்தனர்.  மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.

மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News