விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்கும் தென்னிந்திய நடிகர் இவரா?

இந்திய பேட்டிங் ஐகான் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டால், அதில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக ராம் பொதினேனி தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 28, 2023, 07:05 AM IST
  • விராட் கோலியின் பயோபிக்கில் ராம் பொதினேனி.
  • இருவரும் ஒரேபோல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
  • முன்னதாக ராம் சரணுடன் ஒப்பிட்டு வந்தனர்.
விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்கும் தென்னிந்திய நடிகர் இவரா? title=

தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி திரையிலும், திரைக்கு வெளியிலும் தனது துடிப்பான ஆற்றலுக்கு பெயர் பெற்றவர், இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரரான விராட் கோலியுடன் அவர் அடிக்கடி ஒப்பிடப்படுகிறார். காரணம் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான உயரம் மற்றும் முக அம்சங்கள் கொண்டிருப்பதாக ரசிகர்களும் சில ஊடகங்களும் பரவலாக பேசி வருகின்றனர்.  'இஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் படப்பிடிப்பின் போது தான், ராம் பொதினேனி தோற்றமும், விராட் கோஹ்லியின் தோற்றமும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்பட்டது.  மேலும் இருவரும் ஒரே போல் இருப்பதாக சமூகவலைத்தளங்கில் சில புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.  செப்டம்பர் 28 ஆம் தேதியான இன்று ராம் பொதினேனி நடித்துள்ள திரைப்படமான 'ஸ்கந்தா' திரைக்கு வர உள்ளது.  போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள 'ஸ்கந்தா' படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.  

மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், ராம் பொதினேனி தான் விராட் கோலியுடன் ஒப்பிடுவது குறித்து பேசியுள்ளார். மேலும், அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் அதில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அவரது தோற்றத்தை விராட் கோலியுடன் அடிக்கடி ஒப்பிடம்படுவதை பற்றி பேசிய ராம் பொதினேனி, விராட் கோலி போல் தன்னை ஒப்பிடுவதில் மகிழ்ச்சி அடைவதாக வெளிப்படுத்தினார். விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால், அதில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே விராட் கோலியின் கேரக்டரில் ராம் சரண் நடிக்கிறார் என்று சமீபகாலமாக ஊடகங்கள் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ராம் சரண் தற்போது தனது மற்ற படங்களில் பிசியாக நடித்து வருவதால் , அவரிடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று ராம் சரண் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. 

தமிழில் அடையாளம் எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர் ராம் பொதினேனி. அதன் பின்பு தெலுங்கில் படங்களை தொடர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.  கடந்த ஆண்டு ராம் பொதினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.  மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிதாக எடுபடவில்லை.  புல்லட் என்னும் பாடம் மட்டும் நல்ல வரவேற்பினை பெற்றது. இன்று வெளியாகும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் ஸ்கந்தா படத்தைபொயபடி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ராம் சரண், அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரை வைத்து இயக்கி உள்ளார். ஸ்கந்தா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் படத்தின் கல்ட் மாமா பாடல் வெளியாகியது. லெஜெண்ட் படத்தில் நடித்திருந்த ஊர்வசி ரௌடேலா இந்தப் பாடலில் ரா பொதினேனியுடன் நடனம் ஆடியுள்ளார். 

மேலும் படிக்க | படப்பிடிப்பில் துன்புறுத்திய தமிழ் நடிகர்: நித்யா மேனன் ஓபன் டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News