கவர்ச்சி போட்டோ ஷூட்டில் மோதிக் கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள்

விஜய் டிவி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் திடீரென கவர்ச்சி போட்டோஷூட்டில் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 19, 2022, 12:54 PM IST
  • ரம்யா பாண்டியன் லேட்டஸட் போட்டோஸ்
  • போட்டியாக கவர்ச்சி புகைப்படம் இறக்கிய தர்ஷா
கவர்ச்சி போட்டோ ஷூட்டில் மோதிக் கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள் title=

ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் இணையத்தை கலங்கடித்த ரம்யா பாண்டியன், விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமான அவர், சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவரைப் போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ சீரியலில் நடித்த தர்ஷா குப்தா, குத் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று, இப்போது வெள்ளித்திரையில் வரிசையாக பலபடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

.

மேலும் படிக்க | 44 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் ஆகும் கமல்-ரஜினியின் படம்?

யோகி பாபு லீட் ரோலில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கிறார் தர்ஷா குப்தா. படங்களில் நடித்து ஹிட்டாவதைக் காட்டிலும், இன்ஸ்டாகிராமில் அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுக்காக அவ்வப்போது போட்டோஷூட் நடித்து பதிவிட்டு வருகிறார். அப்படி அண்மையில் நடத்திய கிளாமர் போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சோஷியல் மீடியா வைரல் புகைப்பட லிஸ்டில் கூட அந்த புகைப்படம் இடம்பிடித்துவிட்டது. 

தர்ஷா ஒருபுறம் இப்படி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்க, விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான ரம்யா பாண்டியனும் திடீர் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். அதில் இதுவரை இல்லாத அளவுக்கான கவர்ச்சியில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார். கருப்பு நிற உடையில் இருக்கும் அவர், பதிவிட்டிருக்கும் இந்த போட்டோக்கள், தர்ஷா குப்தா போட்டோவை ஓவர்டேக் செய்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான இருவரும் அடுத்தடுத்து பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்களால், கிறங்கிப் போய் இருக்கும் ரசிகர்கள், ஒருவேளை இருவரும் கவர்ச்சி போட்டோஷூட் மூலம் மோதிக் கொள்கிறார்களோ என கிசுகிசுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | பிறந்தநாளில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பரிசு இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News