Singapore Saloon OTT: சிங்கப்பூர் சலூன் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? முழு விவரம்..

Singapore Saloon OTT: ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. எந்த தளத்தில் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 20, 2024, 12:57 PM IST
  • ஆர்.ஜே.பாலாஜி நடித்த படம், சிங்கப்பூர் சலூன்
  • இப்படம் ஓடிடியில் ரிலீஸாகிறது.
  • எந்த தளத்தில் தெரியுமா?
Singapore Saloon OTT: சிங்கப்பூர் சலூன் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? முழு விவரம்.. title=

Rj Balaji's Singapore Saloon OTT Release Date When And Where To Watch: ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர், ஆர்.ஜே.பாலாஜி. இவர், ரேடியோவில் ஷோ செய்து கொண்டிருக்கும் போதே எக்கச்சக்க மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் வந்து புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிங்கப்பூர் சலூன்:

ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம், கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது. கதையும், கதாப்பாத்திரங்களும் வித்தியாசமாக இருந்ததால் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். இந்த படத்தை கோகுல் இயக்கியிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகியிருந்ததது. 

இந்த படம் குறித்த அறிவிப்பு, 2022ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. படத்தின் ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பிறகும், இதன் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. கடந்த ஆண்டே வெளியாக இருந்த இப்படம், இறுதியில் இந்த ஆண்டில்தான் வெளியானது. 

படத்திற்கு கிடைத்த வரவேற்பு..

ஆர்.ஜே.பாலாஜி இதுவரை ஃபேமிலி டிராமா-நகைச்சுவை நிறைந்த படங்களிலேயே நடித்து வந்தார். முதல் முறையாக அவர் சீரியஸான கதையை தேர்ந்தெடுத்தது, சிங்கப்பூர் சலூன் படம் மூலமாகத்தான். இந்த படத்தில், வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படம், மோட்டிவேஷனுடன் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அது மட்டுமன்றி, நல்ல விமர்சனங்களும் கிடைத்தது. இந்த படம் ரிலீஸான அன்று, அசோக் செல்வன் நடித்திருந்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும் வெளியானது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்று, ரசிகர்களை கவர்ந்திருந்தது. 

மேலும் படிக்க | D 50 Title: மொட்டை தலை லுக்கில் தனுஷ்! டி 50 டைட்டில் என்ன தெரியுமா?

கிராமத்தில் வாழும் ஒரு இளைஞன், உலகிலேயே பெரிய சிகை அலங்கார நிபுணர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறான். அந்த கனவுக்காக அவன் செய்யும் விஷயங்களே படத்தின் கதை. இது, இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் வகையில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. 

ஓடிடியில் ரிலீஸ்:

தற்போது வெளிவரும் படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரங்கள், படத்தின் ரிலீஸிற்கு முன்னரே வெளிவந்து விடுகின்றன. அந்த வகையில், சிங்கப்பூர் சலூனும் ‘டெண்ட்கொட்டா’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அந்த தளமே தங்களின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது. 

எப்போது பார்க்கலாம்? 

சிங்கப்பூர் சலூன் படத்தை, வரும் பிப்ரவரி 23ஆம் தேதியில் இருந்து டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம். தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள், ஓடிடியில் இதனை காண ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

படக்குழு:

ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து நடிகர் சத்தியராஜ், சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ‘முதல் நீ முடிவும் நீ’ ஹீரோ கிஷன் தாஸ், இதில் இன்னொரு முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார். GOAT பட நாயகி மீனாட்சி செளத்ரி, ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். 

மேலும் படிக்க | கதாநாயகனாக அறிமுகமாகும் தங்கர் பச்சானின் மகன் விஜித்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News