சீதா ராமன் அப்டேட்: மகாவுடன் சண்டைக்கு வந்த கல்பனா.. ராமும் சீதாவும் கொடுத்த ட்விஸ்ட்

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2023, 12:37 PM IST
  • ராமிடம் விஷயத்தை சொல்லும் சீதா.
  • டிராமா போடும் சீதா.
  • கடுப்பாகும் சுபாஷ்.
சீதா ராமன் அப்டேட்: மகாவுடன் சண்டைக்கு வந்த கல்பனா.. ராமும் சீதாவும் கொடுத்த ட்விஸ்ட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா கல்பனாவுக்கு காபியில் மிளகாய் தூளை கலந்து கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ராமிடம் விஷயத்தை சொல்லும் சீதா

அதாவது, சீதா ராமிடம் வந்து நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் என கல்பனாவுக்கு காபியில் மிளகாய் தூளை கலந்து கொடுத்த விஷயத்தை சொல்கிறாள். ராம் நீ பண்ணது தப்பு கிடையாது, சரியாக தான் பண்ணிருக்க என்று ராம் சொல்ல சீதா இப்போ அவங்க மூணு பேரும் சேர்ந்து சண்டைக்கு வருவாங்க என்று சொல்கிறாள். 

டிராமா போடும் சீதா

அதற்கேற்றார் போல நடந்த விஷயங்களை சொல்லி கல்பனா அர்ச்சனா மற்றும் மகாவுடன் கிளம்பி வர சீதா காய்ச்சல் வந்தது போல் இழுத்து போத்தி கொண்டு டிராமா போடுகிறாள். ராம் அவளுக்கு மருந்து கொடுத்து கொண்டு மூன்று மணி நேரமாக உடம்பு சரியில்ல, படுத்திட்டே இருக்கா என்று சொல்லி அவரும் பெர்பாமன்ஸை போடுகிறார். 

மேலும் படிக்க | Salaar First Single: சலார் படத்தின் முதல் சிங்கிள்! ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

கடுப்பாகும் சுபாஷ்

அதன் பிறகு இவர்கள் ரூமில் இருந்து வெளியே வந்த பிறகு சீதா மீண்டும் கல்பனாவை சந்தித்து இன்னொரு  பண்ணா மண்டையிலேயே போட்டுடுவேன் என்று வார்னிங் கொடுக்கிறாள். அதனை தொடர்ந்து ராம் சேதுவை சந்தித்து ஷேரை சீதா பெயருக்கு மாற்றி எழுதியதற்காக மன்னிப்பு கேட்க அவர் நீ பண்ணது தான் சரி என்று சொல்கிறார். இதையெல்லாம் ஒட்டு கேட்கும் சுபாஷ் கடுப்பாகிறார். 

பிறகு மகா வீட்டிற்கு குருஜியை வரவைத்து பூஜை செய்து எல்லாருக்கும் பிரசாதத்தை நெற்றியில் வைத்து விடுகிறாள், இறுதியாக சீதா வந்து நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? மகா செய்ய போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | பணத்தில் புரளும் எதிர்நீச்சல் நடிகர்கள்.. ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News