சீதா ராமன் அப்டேட்: மணமேடை ஏறிய மீரா.. சீதா வைத்த டுவிஸ்ட்

Seetha Raman Today's Episode Update: விஷாலை கல்யாணம் செய்து கொள்ள மணமேடை ஏறிய மீரா.. சீதா வைத்த டுவிஸ்ட் - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 13, 2023, 02:02 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்
  • சீதாவுக்கு வலுக்கும் சந்தேகம்.
  • நான் தாலி கட்டிட்டுறேன்: விஷால்.
சீதா ராமன் அப்டேட்:  மணமேடை ஏறிய மீரா.. சீதா வைத்த டுவிஸ்ட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மகா விஷாலுடன் மீராவுக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஆறுதல் கூறும் ராம்

அதாவது சீதா ஏதோ தப்பா நடக்க போகுது என்று குழப்பத்தில் இருக்க ராம் அப்படி எதுவும் நடக்காது என்று ஆறுதல் சொல்கிறான். 

மறுபக்கம் மீராவுக்கு கல்யாண அலங்காரங்கள் நடக்க ஐயர் மந்திரங்கள் சொல்ல விஷால் மணமேடையில் உட்கார்ந்து இருக்க விஷாலின் அப்பா என் பையனுக்கு மட்டும் இந்த கல்யாணம் நடக்கலனா இதுக்கப்புறம் அவனுக்கு கல்யாணமே நடக்காதுன்னு ஜோசியர் சொல்லியிருந்தார், மகா தான் என் குடும்பத்துக்கு உதவி பண்ணி இருக்கிறார் என்று நன்றி சொல்ல விஷால் நாமளும் தான் அவங்களுக்கு உதவி பண்ணியிருக்கோம் என்று சொல்கிறோம்.

சீதாவுக்கு வலுக்கும் சந்தேகம் 

அடுத்ததாக செல்வி சீதாவுக்கு போன் செய்து விசயத்தை சொல்ல முயற்சி செய்ய மகா இதை பார்த்து போனை தூக்கிப்போட்டு உடைத்து செல்வியை அடித்து விட சீதாவுக்கு மேலும் சந்தேகம் அதிகமாகிறது. 

நான் தாலி கட்டிட்டுறேன்: விஷால்

பிறகு மீராவையும் அழைத்து வந்து மணமேடையில் உட்கார வைக்க மீரா கையில் இருந்து இரத்தம் கொட்டுவதை பார்த்து ஐயர் பதற்றம் அடைய மகாலட்சுமி முதலில் கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் கொண்டு செல்லலாம் என்று சொல்ல விஷாலும் நான் தாலி கட்டிட்டுறேன் என்று சொல்ல செக்யூரிட்டி தாலி கட்டின பிறகு ஒருவேளை மீரா இறந்து போயிட்டாங்கனா உங்களுக்கு இதுவே கடைசி கல்யாணம் ஆகிவிடும் என்று கோர்த்து விடுகிறான். 

 

லும் படிக்க | இசைக் கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடி.. ஏசிடிசி இயக்குநர் புதிய விளக்கம்

உடனே விஷால் ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு மீரா இறந்து போயிட்டா உங்க மூணு பொண்ணுல ஒரு பொண்ணை எனக்கு கட்டி வைக்கணும் என்று சொல்ல அர்ச்சனாவும் மகாவும் அதிர்ச்சி அடைகின்றனர். 

பிறகு கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் வர சீதா மற்றும் ராம் டாக்டர் வேடத்தில் வந்து மீராவை பரிசோதனை செய்து உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும் என்று சொல்ல மகா எதுவாக இருந்தாலும் இங்கேயே பாருங்க என்ன வேண்டுமானாலும் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறாள். உயிர் போயிடுச்சுன்னா போலீஸ் கேஸ் ஆகிடும் என்று சொல்லி மீராவை ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர்.

மகா மற்றும் விஷால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்குள் இவர்கள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மார்க் ஆண்டனி படம் செப்.15ம் தேதி வெளியாகுமா? நீதிமன்றம் சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News