கேஜிஎப் யாஷ் உடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! லேட்டஸ்ட் அப்டேட்!

இந்தியத் திரையுலகில் பரபரப்பான செய்தி என்னவென்றால், பழம்பெரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தற்போதைய பான் இந்திய சூப்பர் ஸ்டார் யாஷ் இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2023, 11:29 AM IST
  • ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
  • 'தலைவர் 171' படத்தில் 'கேஜிஎஃப்' புகழ் யாஷுக்கும் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
  • லியோ படம் வெளியான பின் தலைவர் 171 படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎப் யாஷ் உடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! லேட்டஸ்ட் அப்டேட்! title=

தமிழ் நடிகர்கள் பலர் தற்போது பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூல இந்திய திரைபடங்கள் பல்வேறு வளர்ச்சியை பெற்று வருகிறது.  இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான 'ஜெயிலர்' இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது, மேலும் சில வாரங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்திற்கான தனது பகுதிகளை முடிக்கிறார். டி.ஜே.ஞானவேல் இயக்கும் 170வது படம் இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே செய்தி வெளியானது. லைம்லைட்டில் இருந்து விலகி ரஜினியின் கடைசிப் படமாக இது இருக்கலாம் என்று கூட செய்திகள் வருகின்றன. 

மேலும் படிக்க | உண்மையான சார்பட்டா பரம்பரை ஹீரோ காலமானார்..! ரசிகர்கள்-பிரபலங்கள் இரங்கல்!

தற்போது வரை வெளியான தகவலின் படி, இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மற்ற பெரிய நிறுவனங்களும் இந்த படத்தை தயாரிக்க போட்டியிடுகின்றன.  இந்த படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன வென்றால் 'தலைவர் 171' படத்தில் 'கேஜிஎஃப்' புகழ் யாஸ்க்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே கன்னட மெகா ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாலும், அவர்கள் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாலும் அவர் ஒப்புதல் அளிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. மேலும் யாஷ் ஒரு தீவிர ரஜினி ரசிகரும் கூட, இந்த வாய்ப்பை இழக்க அவர் விரும்பமாட்டார். இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் நடிக்கும் தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். எனவே லியோ திரைபடம் முடிவடைந்த உடன் இந்த படத்திற்கான வேலை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்கள் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது, இந்நிலையில் இரு பெரும் புள்ளிகளான ரஜினிகாந்த் மற்றும் யாஷ் வைத்து இயக்கும் படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்புகளும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் ரஜினி இணையும் 'தலைவர் 170' படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  முன்னதாக, சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் 1991 ஆம் ஆண்டு பாலிவுட் பிக்பாஸ் 'ஹம்' படத்தில் நடித்தனர். கேங்ஸ்டர் படமான 'பாஷா'வுக்கு 'ஹம்' ஒரு தீப்பொறி என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போது, ​​இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் என்கவுன்டர் தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வு பெற்ற காவலராக ரஜினி நடிக்கிறார்.  இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News