வெள்ளித்திரையில் தடம் பாதக்கப்போவதை உறுதிப்படுத்திய ஷிவானி!

'மாஸ்டர்' படத்தில் ஏராளமான யூடியூபர்களை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தில் தொலைக்காட்சி நடிகர்கள் பலரையும் நடிக்கவைத்திருக்கிறார்.  தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2021, 08:22 PM IST
வெள்ளித்திரையில் தடம் பாதக்கப்போவதை உறுதிப்படுத்திய ஷிவானி! title=

சென்னை : 'மாஸ்டர்' படத்தில் ஏராளமான யூடியூபர்களை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தில் தொலைக்காட்சி நடிகர்கள் பலரையும் நடிக்கவைத்திருக்கிறார்.  தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.  இதனிடையே நடிகை ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

shivani

இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்த ஷிவானி, தற்போது முதன்முறையாக இதனை உறுதி செய்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா..??? என கேள்வி எழுப்பினார்.  இதற்கு 'விக்ரம்' படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் தனது பெயர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன்மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், ஷிவானி தவிர 'மைனா' நந்தினியும், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மகேஸ்வரியும் 'விக்ரம்' படத்தில் நடிக்கிறார்கள்.

ALSO READ H.வினோத் பிறந்தநாளில் வலிமை படத்தின் புதிய அப்டேட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News