விவேக் மரணத்திற்கு இது தான் காரணம்! உண்மைகள் கசிவு!

சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முன்னின்ற நடிகர் விவேக் நேற்று காலமானார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2021, 07:22 AM IST
விவேக் மரணத்திற்கு இது தான் காரணம்! உண்மைகள் கசிவு! title=

நடிகர் விவேக் கடந்த 15 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என பேட்டியளித்தார். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதற்கிடையில் நடிகர் விவேக்கின் (Vivekh) மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) காரணம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையிலும் சமூக வலைதளங்களில் இது பெரிய விவாதமாக மாறி உள்ளது. குறிப்பாக மன்சூரலிகான் (Mansoor Ali Khan) எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளத்தில் விவாதமாகியுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் ராதகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் விவேக்கின் மரணத்திற்கும் எவ்வித தொடர்பில்லை. நடிகர் விவேக்கிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் திடீரென்று 100 சதவீத அடைப்பு ஏற்பட்டது எப்படி என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ALSO READ | அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு

சுவாசப் பாதை தொற்றுக்கும் ஹார்ட் அட்டாக்கும் சம்பந்தமில்லை. ஹார்ட் அட்டாக் (Heart Attack) வர நம் இதயத்துக்கு ரத்தம் போகும் அல்லது வரும் பாதைகளில் ஏற்படும் அடைப்பு காரணம் . அந்த அடைப்பு ஒரே நாளில் வராது. விவேக்கிற்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பை சைலண்ட் ஹார்ட் அட்டாக். 

அதாவது இத்தகைய மாரடைப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் எந்த ஒரு வலியையும் கொடுக்காமல் சட்டென்று இருதயத்துக்கு செல்லும் ரத்தத்தை உறைய வைத்து கிட்னி, மூளை என அடுத்தடுத்த பாகங்களையும் செயல் இழக்க வைத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று விபரீத உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் என்கின்றனர். இது போன்ற சைலண்ட் மாரடைப்பு மரணங்கள் தூக்கத்திலேயே பலருக்கு நிகழ்ந்துள்ளதாகவும் விவேக் விஐபி என்பதால் வெளி உலகிற்கு தெரிகிறது. 

தடுப்பூசி போடுவதற்கு முன் கார்டியோ டெஸ்ட் எடுக்கலாம். முன்னெச்சரிக்கை நல்ல விஷயம். கார்டியாக் பிரச்சினை உள்ளவர் தடுப்பூசி போடுவதை தவிர்க்கலாம். அவர்கள் முதலில் தங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் தடுப்பூசியால கார்டியாக் வர வாய்ப்பு எதுவும் இருப்பதாக ஆய்வு இல்லை. 

இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட மறு நாளே விவேக் உயிரிழந்திருப்பதால், தடுப்பூசிக்கு எதிராக பரவி வரும் அச்சத்தால் சுகாதாரத்துறையினர் விழிபிதுங்கி போயுள்ளனர்.

ALSO READ | நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News