OTT Release: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Release Movies Tamil: திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பல, தற்போது ஓடிடியில் உடனே ரிலீஸ் ஆவது சகஜமாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Feb 22, 2024, 01:52 PM IST
  • இந்த வாரம் ஓடிடி தளத்தில் பல படங்கள் ரிலீஸாகின்றன
  • லிஸ்டில் சிங்கப்பூர் சலூன் உள்பட பல படங்கள் உள்ளன
  • எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?
OTT Release: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?  title=

Sinapore Saloon To Malaikottai Vaaliban OTT Release Movies Tamil When And Where To Watch Them: தியேட்டர்களில் வெளியாகும் புதுப்புது படங்களும் ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளியாகவது சகஜமாகி வருகிறது. இந்நிலையில், இந்த வாரத்தின் ஒரே நாளில் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள்/தொடர்கள் என்பதையும், அதனை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

சிங்கப்பூர் சலூன்:

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம், சிங்கப்பூர் சலூன். இந்த படத்தை கோகுல் இயக்கியிருந்தார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷின் தயாரிப்பில் இப்படம் வெளியாகியிருந்தது. சத்யராஜ், கிஷன் தாஸ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும், நடிகர் ஜீவாவும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். ‘GOAT’ பட நாயகி மீனாட்சி சௌத்ரி, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், டெண்ட் கொட்டா தளத்தில் நாளை (பிப்., 23) வெளியாக உள்ளது. 

மலைக்கோட்டை வாலிபன்:

மோகன் லால் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியாகியிருந்த படம், மலைக்கோட்டை வாலிபன். இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, காதா நந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். லிஜோ ஜோஸி இயக்கத்தில் இப்படம் வெளியாகியிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம், ஒரு சில சினிமா ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது. இப்படம், தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை (பிப்., 23) வெளியாக உள்ளது. 

OTT Movies

போச்சர்:

நிமிஷா சஜ்ஜயன், ரோஷன் மாத்யூ உள்ளிட்டோர் நடித்துள்ள மினி தொடர், போச்சர். க்ரைம் ட்ராமாவாக உருவான இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தொடரை ரிச்சி மெகதா இயக்கியுள்ளார். இத்தொடர், பிரைம் வீடியோவில் வரும் 23 ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. 

பம்மகலப்பம் 2:

பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், பம்மகலப்பம்2. டார்க் காமெடி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளன.ர் இதில் பிரியாமணியுடன் இணைந்து சரண்யா பிரதீப், ரகு முகர்ஜி, சீரத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

தி இந்திராணி முகர்ஜி ஸ்டோரி: 

2012ஆம் ஆண்டு, மும்பையில் நடைப்பெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருக்கும் டாக்குமெண்டரி தொடர் இது. தி இந்திராணி முகர்ஜி ஸ்டோரி: பரீட் ட்ரூத் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த தொடர், இந்தி மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை காண பல கோடி இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இத்தொடரை, நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

மேலும் படிக்க | Rakul Preet Singh: காதலரை கரம் பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

மியகல்பா:

ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் திரைப்படம், மிய கல்பா. நீதிமன்ற வழக்கை வைத்து க்ரைம் த்ரிலல்ர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், ஷான் சாகர், நிக் சாகர், கெர்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

பிற ரிலீஸ்கள்:

மேற்கூறிய படங்கள்/தொடர்களை தவிர இன்னும் சில படைப்புகளும் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதையும், எந்த தளத்தில் அவற்றை நாளை பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

>ஸ்கூல் டேஸ்-கொரியன்-நம்ம ஃப்ளிக்ஸ்
>சா எக்ஸ்-ஆங்கிலம்-லையன்ஸ் கேட் ப்ளே
>கேன் ஐ டெல் யூ அ சீக்ரெட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>த்ரூ மை விண்டோ 3-ஸ்பானிஷ்-நெட்ஃப்ளிக்ஸ்
>அவதார் தி லாஸ்ட் ஏர்பிண்டர்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

மேலும் படிக்க | மங்கை மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது: நடிகை கயல் ஆனந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News