உதயமாகி உச்சம் பெறப்போகும் குரு .. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்

Guru Uday 2024: வேத ஜோதிடத்தின்படி, தெய்வங்களின் குருவான வியாழன், வக்ர நிலையில் அமர்ந்துள்ளார். இப்போது குரு ஜூன் 3 ஆம் தேதி ரிஷப ராசியில் உதமாகப் போகிறார். குருவின் உதயத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். எனவே அந்த ராசிகளை பற்றி இந்த தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2024, 07:14 PM IST
  • எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலனைத் தரும்.
உதயமாகி உச்சம் பெறப்போகும் குரு .. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம் title=

Guru Uday 2024: வேத ஜோதிடத்தின்படி, தற்போது குருவின் ராசியில் மூன்று கிரகங்கள் பயணித்து வருகின்றனர். தற்சமயம் தேவர்களின் குருவான வியாழன் ரிஷபத்தில் அஸ்தமன நிலையில் அமர்ந்திருக்கிறார், முன்னதாக மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். தற்போது அஸ்தமன நிலையில் உள்ள குரு இன்னும் சில நாட்களில் உதயமாகவுள்ளார். தற்போது சில நாட்களுக்குப் பிறகு ரிஷப ராசியில் உதயமாகப் போகும் குரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. இது தவிர, சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறார் குரு. வேத ஜோதிடத்தின்படி, குரு பகவான் விழாயன் வருகிற ஜூன் 3 ஆம் தேதி ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். எனவே குரு வியாழனின் உதயம் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறிந்துக்கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): ஜோதிடத்தின் படி, குரு ரிஷப ராசியில் உதயமாவது மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நிதி ஆதாயமும் உண்டாகும். வெளிநாடு செல்ல வேண்டிய கனவு இந்த நேரத்தில் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவைப் முழுமையாக பெறுவீர்கள். மேஷ ராசிக்காரர்களின் தொழிலில் சாதகமான தாக்கம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் கட்டாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை மாற்றத்திற்குப் பிறகு வாழ்க்கை நிம்மதியாகிவிடும். வியாபாரிகளுக்கு குருவின் உதயம் மிகவும் சாதகமான பலனைத் தரும்.

மேலும் படிக்க | Shani Dev And Zodiac Signs: சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: இவர்களை கைவிட மாட்டார், எப்போதுமே அருள் மழை பொழிவார்

கடகம் (Cancer Zodiac Sign): வேத ஜோதிடத்தின் படி, குரு உதயமாகப் போவது கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலனைத் தரும். வாழ்க்கையில் நன்மை பயக்கும். குருபகவான் உச்சம் பெறுவதால் கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதீத லாபத்தை தரும். தொழில் தொடர்பாக சிறிது தூரமான பயணித்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலைகளில் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் பெறலாம். அரசியல் துறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு உதயமாகப் போகிறது. ஒன்பதாம் வீட்டில் குரு உதயம் என்பது அதிர்ஷ்டத்தை அள்ளி வாரித் தரும். எனவே அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவையும் இந்த நேரத்தில் பெறுவீர்கள். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் தொழிலில் பண வரவு உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Chaturgrahi Yoga 2024: ரிஷப ராசியில் 4 கிரகங்கள் இணைவதால் சதுர்கிரஹி யோகம்! 3 ராசிகளுக்கு இனி பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News