சிவகார்த்திகேயனின் "மாவீரன்".. அட்டகாசமான அப்டேட்..படக்குழு வெளியிட்ட வீடியோ..

Sivakarthikeyan Maaveeran Movie Update: மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பாக வெளியான வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 27, 2023, 03:45 PM IST
  • மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி வெளியாகப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
  • மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு.
  • மாவீரன் வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது
சிவகார்த்திகேயனின் "மாவீரன்".. அட்டகாசமான அப்டேட்..படக்குழு வெளியிட்ட வீடியோ.. title=

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் அப்டேட்: தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும், எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், மிஷ்கின், கவுண்டமணி, சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்திற்கு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல் மாவீரன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சியும் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. முன்னதாக இயக்குனருடன், நடிகருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் பணிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டதாக சில செய்திகள் வெளியானது. அதன்பின்னர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் படிக்க | ரீல் வாழ்க்கையில் டூயட் பாடி ரியல் வாழ்க்கையில் ஜோடி சேர்ந்த ஜீவி-சைந்தவி !

இந்த நிலையில் தற்போது படக்குழு மற்றொரு அப்டேட்டினை வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்புகளுடன் வெளியான வீடியோவில் மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பாக வெளியான வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மாவீரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை சன் தொலைக்காட்சியும் ஒடிடி உரிமம் அமேசான் பிரைம் தளமும் பெற்றுள்ளது.

முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம், டப்பிங் வீடியோ மற்றும் அனிருத் குரலில் ‘சீனா சீனா’ என்ற முதல் பாடல் வெளியாகி டிரெண்ட் ஆனது, இதனால் நகர்புற வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மாவீரன் படத்தை தவிர நடிகர் சிவகார்த்திகேயன் பிரம்மாண்ட Sci-fi திரைப்படமான ‘அயலான்’ திரைபடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இதன் பின்னர் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க | Jailer audio launch: ஜெய்லர் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News