Anna Serial Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.
அண்ணா : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. வாரத்தின் 7 நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷை கொல்ல சௌந்தரபாண்டி முத்துபாண்டியை அழைத்து கொண்டு சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
அதாவது, ஷண்முகம் ரத்னாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட இசக்கிக்கு அம்மா ஞாபகம் வந்து அம்மா இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்கிறாள். உடனே வைகுண்டத்திற்கு தனது மனைவி சூடாமணி உயிரோடு இருப்பதாக சொன்ன விஷயம் நினைவிற்கு வருகிறது, ஷண்முகம் ஒரு அம்மாவாக தாலாட்டு பாடி தங்கைகளை தூங்க வைக்கிறான்.
மறுபக்கம் சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டி இருவரும் வெங்கடேஷ் வீட்டிற்கு வருகின்றனர், அதே நேரம் வெங்கடேஷ் இல்லாமல் இருக்க அவனது அப்பாவிடம் சௌந்தரபாண்டி துப்பாக்கியை கொடுத்து என் பையனை கொன்னுடு என்று சொல்கிறார், அவர் பயந்து போய் துப்பாக்கியை கீழே போட ஒன்னு என் பையனை கொன்னுட்டு ரத்னாவை உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வை, இல்லனா நான் உன் பையனை கொன்னுட்டு என் பையனுக்கு அவளை கட்டி வைப்பேன் என்று சொல்ல இவர்கள் ரெண்டுமே முடியாது என்று சொல்கின்றனர்.
மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல்
இறுதியாக சௌந்தரபாண்டி நீங்க இந்த ஊர்ல இருக்க கூடாது என மிரட்டி விட்டு போக வெங்கடேஷ் வீட்டிற்கு வந்ததும் அவனது அம்மா நமக்கு இது எதுவும் வேண்டாம், ஊரை விட்டு போய்டலாம் என்று சொல்ல வேறு வழியில்லாமல் வெங்கடேஷும் சம்மதம் சொல்லி விடுகிறான். மறுநாள் ஷண்முகம் போலீஸ் மூலமாக கார்த்தியின் நம்பரை வாங்கி அவனுக்கு போன் செய்ய ஷண்முகம் உதவிய நர்ஸ் போன் எடுத்து உங்களால் நாங்க இப்போ சந்தோசமாக இருக்கோம் என்று நன்றி சொல்ல ஷண்முகம் இங்கே நடந்த பிரச்சனைகளை சொல்கிறான்.
உடனே அந்த நர்ஸ் நானும் கார்த்தியும் வந்து பரணியிடம் மொத்த உண்மைகளை சொல்கிறோம் என்று சொல்லி போனை வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ