நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஜமௌலி - வைரலாகும் வீடியோ

இயக்குநர் ராஜமௌலி நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

Last Updated : Apr 6, 2022, 01:50 PM IST
  • நடனம் ஆடிய ராஜமௌலி
  • நாட்டு நாட்டு பாடலுக்கு ராஜமௌலி நடனம்
  • 1000 கோடி ரூபாயை நெருங்கியது ஆர்.ஆர்.ஆர்.
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஜமௌலி - வைரலாகும் வீடியோ title=

பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரமாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்தவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் ராம்சரணையும்,  ஜூனியர் என்.டி.ஆரையும் வைத்து ஆர்.ஆர்.ஆர் (ரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் ஆர்.ஆர்.ஆர். படத்தை விமர்சித்தனர். மேலும், படமானது இந்துத்துவா சிந்தனையுடன் இருக்கிறது எனவும் அவர்கள் கூறினர்.

Rajamouli

இருப்பினும் இந்தப் படம் இதுவரை உலகளவில் 900 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில நாள்களில் ஆர்.ஆர்.ஆர். 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் ஆர்.ஆர்.ஆர். படம் இணையவிருக்கிறது.

மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!

இந்தச் சூழலில் படத்தினை விநியோகம் செய்திருந்த தயாரிப்பாளர் தில்ராஜு நேற்று ஹைதராபாத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Rajamouli

அந்த நிகழ்ச்சியில் மேடையேறிய ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க | பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - ஒருவாரம் சென்னையில் படப்பிடிப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News