பாலா படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கும் சூர்யா!

பேரழகன் மற்றும் மாற்றான் படங்களை தொடர்ந்து பாலா படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 21, 2021, 07:15 PM IST
பாலா படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கும் சூர்யா!

கடந்த 20 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. பேரழகன் மற்றும் மாற்றான் படங்களை தொடர்ந்து இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.  

ALSO READ 'ஜெய் பீம்' பட சர்ச்சை குறித்து இயக்குனர் ஞானவேல் கூறிய பதில்!

இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சூர்யா நடித்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில்  இந்த திரைப்படம் பிப்ரவரி 4-ம் தேதி ரிலீஸ் ஆகுகிறது.  

vadivasal

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' என்கிற படத்தில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில் பாலா இயக்கும் இந்த படத்தில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.  இன்னும் சில நடிகர்களை தேர்ந்தெடுத்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என இயக்குனர் பாலா அறிவித்துள்ளார்.

 

சூர்யாவை வைத்து பாலா இயக்கும் இந்த படத்தில்  நடிகர் அதர்வா ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் சூர்யாவே நடிக்கிறார். பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான பிதாமகன் மற்றும் நந்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்போது இவர்களது கூட்டணியில் உருவாக போகும் இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

ALSO READ சூர்யா படத்திற்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News