நா ரெடியா பாடல் சர்ச்சை: பாடலில் திருத்தம் செய்த லியோ படக்குழு..

Thalapathy Vijay LEO Naa Ready Song: நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் இடம்பெறுள்ள நா ரெடி பாடலில் லியோ படக்குழு மாற்றம் கொண்டு வந்து உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 28, 2023, 04:57 PM IST
  • லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
  • நா ரெடியா பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.
  • அதிரடி மாற்றம் செய்த லியோ படக்குழு.
நா ரெடியா பாடல் சர்ச்சை: பாடலில் திருத்தம் செய்த லியோ படக்குழு..  title=

தளபதி விஜய் லியோ படத்தின் முக்கிய அப்டேட்: 'மாஸ்டர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் 'லியோ' படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் 19 ஆம் தேதியன்று திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த படம் தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்புகள் உள்ளன.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து லியோ படத்தினை தயாரிக்கின்றன. இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, அபிராமி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். 

மேலும் படிக்க | 'ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடல் 100 மில்லியன் வியூஸ்... பாடகர் செந்தில் தாஸ் நெகிழ்ச்சி!

இதனிடையே கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு கொடுக்கும் வகையில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சரியான 12 மணிக்கு வெளியானது. அதே போல் படத்தின் முதல் பாடலான "நா ரெடி" பாடலும் அன்று மாலை வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் தனது குரலில் பாடி இருந்தார். மேலும் இதில் ராப் பக்கத்தை அசல் கோளாறு பாடியுள்ளார். இதில் நா ரெடி பாடலில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ரவுடிசத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி நடிகர் விஜய் மீதுசென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து நா ரெடி பாடலுக்கு எழுந்த சர்ச்சைக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது. அந்தவகையில் தற்போது நான் ரெடி பாடலில், லியோ படக்குழு ஒரு மாற்றத்தை செய்து, தற்போது இந்த வீடியோவில் புகை பிடித்தல் புற்று நோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் சட்ட ரீதியாக எந்த பிரச்சினை இனிமேல் விஜய் எதிர்கொள்ள தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதயனிடையே லியோ படத்தின் எதிர்பார்ப்பு இருந்து வந்த அதே வேளையில், விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது எனலாம். இருப்பினும், தற்போதைக்கு லியோ படத்தின் மீதுதான் முழு கவனமும் இருக்க வேண்டும் என்பதால், தளபதி 68 குறித்த முதல் அறிவிப்போடு அதுகுறித்த தகவல்களை வெளியிடலாம் என படக்குழு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சூர்யா படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம்..வருத்தம் தெரிவித்த உதயநிதி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News