இன்று நகைச்சுவை நாயகன் கவுண்டமணிக்கு பிறந்தநாள்

Last Updated : May 25, 2017, 02:38 PM IST
இன்று நகைச்சுவை நாயகன் கவுண்டமணிக்கு பிறந்தநாள் title=

காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 78 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். 

கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் பிறந்தார். 

அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தார்.

இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

Trending News