வீரா சீரியல்: போதையில் விழுந்த மாறன்.. வீரா செய்த உதவி, கேசவன் சொன்ன வார்த்தை!

Zee TV Veera TV Serial  Update: போதையில் விழுந்த மாறன்.. வீரா செய்த உதவி, கேசவன் சொன்ன வார்த்தை - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2024, 03:37 PM IST
  • வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ராமசந்திரன் கடையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் வீரா.
  • வீரா சீரியல்: இன்று நடக்க போவது என்ன.
வீரா சீரியல்: போதையில் விழுந்த மாறன்.. வீரா செய்த உதவி, கேசவன் சொன்ன வார்த்தை! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கண்மணி ராகவனுடன் வெளியே சென்றிருக்க ராஜேஷின் அப்பா அதை பார்த்து திட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ராமசந்திரன் கடையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் வீரா நைட் அக்கவுண்ட்ஸ் பார்க்க வேண்டி இருக்கு என்று சொல்லி கிளம்புகிறாள். அம்மா நைட் எதுக்கு டி போற என்று கேட்க இப்போ வேலை பண்ணா பேட்டா கிடைக்கும் என்று பொய் சொல்லி விட்டு வருகிறாள். 

நைட் சவாரி ஓட்டி ஒரு டீ கடையில் நின்று டீ குடித்து கொண்டிருக்கும் போது மாறன் குடித்து ஆடி வந்து கீழே விழுகிறான், இதை பார்த்த வீரா அவனை வீட்டில் கொண்டு போய் விட முடிவெடுக்கிறாள். முதலில் தயங்கும் வீரா பிறகு மாறனை ஆட்டோவில் தூக்கி கொண்டு செல்கிறாள். மாறன் புலம்பி கொண்டே வருகிறான். 

மேலும் படிக்க | Aishwarya Shankar : இயக்குநர் ஷங்கர் மகளின் திருமண நிகழ்வில் திரையுலக பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்..

பிறகு ராகவனுக்கு போன் போட்டு வர சொல்லி மாறனை இறக்கி விட அவன் வீராவிடம் நீ இந்த நேரத்தில் எங்க போன என்று கேட்க கொஞ்ச வேலை இருந்தது அதான் ஆட்டோவை எடுத்துட்டு வந்தேன் என்று பொய் சொல்லி கிளம்பி வருகிறாள். இதையடுத்து மறுநாள் காலையில் ராகவன் மாறனிடம் நைட் உன்னை கூட்டி வந்தது யார் என்று தெரியுமா? என்று நடந்ததை சொல்கிறான். ஒன்னு அவங்களுக்கு நன்றி சொல்லு இல்லனா கூட்டி வந்து விட்டதுக்கு பணத்தை கொடு என்று சொல்ல அவளுக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லி கிளம்பி கடைக்கு வருகிறான். 

கடையில் வீராவையே பார்த்து கொண்டிருக்கும் மாறன் அவள் அப்படி நகர்ந்து சென்றதும் அவளது பேக்கில் பணத்தை வைக்க அதை வீரா பார்த்து விடுகிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News