காமராஜருக்கு பிறகு கல்விக்கண் திறந்தவர் ஐசரி கணேஷ் தான் - கூல் சுரேஷ்!

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கூல் சுரேஷ்க்கு ஐபோன் பரிசளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.   

Written by - RK Spark | Last Updated : Sep 28, 2022, 11:21 AM IST
  • வெந்து தணிந்தது காடு வெற்றி படமாக மாறி உள்ளது.
  • சிம்புவிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
  • கூல் சுரேஷ்க்கு ஐபோன் பரிசு கிடைத்துள்ளது.
காமராஜருக்கு பிறகு கல்விக்கண் திறந்தவர் ஐசரி கணேஷ் தான் - கூல் சுரேஷ்! title=

சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் வேண்டும் வெந்து தணிந்தது காடு.  ஜெயமோகன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது, வெந்து தணிந்தது காடு படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மும்பை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கும், படத்தில் இடம் பெற்ற பாடலுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் அவளுடன் காத்துக் கொண்டுள்ளனர். 

VTK

மேலும் படிக்க | பிக்பாஸ்-6 நிகழ்ச்சி எப்போது? அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு!

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.  இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசேரி கணேஷ் நடிகர் சிம்புவிற்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார், மேலும் இயக்குனர் கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்கையும் பரிசாக வழங்கினார். வெந்து தணிந்தது காடு படத்திற்கு தான் போகும் இடம் எல்லாம் புரமோஷன் செய்த கூல் சுரேஷ்க்கு பரிசு இல்லையா என்று இணையத்தில் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

இதன் பிறகு கூகுல் சுரேஷ்க்கு ஐபோனை பரிசாக வழங்கி உள்ளார் ஐசரி கணேஷ். மேலும் அவரது குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கூல் சுரேஷ் ஐசரி கணேஷ்க்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவரது புகைப்படத்தை பூஜை அறையில் வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  கூல் சுரேஷ் தனது அடுத்த படத்தில் நடிப்பதாக சிப்பு சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | தனுஷை விட வளர்ந்து விட்டாரா சிவகார்த்திகேயன்? ருசிகர தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News