விஜய்யின் வாரிசு ட்ரைலர் இந்த தேதியில் வெளியாகிறதா? வெளியான மாஸ் அப்டேட்!

விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் ட்ரைலர் 2023 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 27, 2022, 09:52 AM IST
  • வாரிசு படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது.
  • படம் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
  • துணிவு படமும் அதே தேதியில் வெளியாகிறது.
விஜய்யின் வாரிசு ட்ரைலர் இந்த தேதியில் வெளியாகிறதா? வெளியான மாஸ் அப்டேட்! title=

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்துகொண்டு இருக்கிறது, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.  படத்தின் பணிகள் கிட்டதட்ட நிறைவடைந்த நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.  மெட்ரோ ரயில் தொடங்கி எந்த பக்கம் திரும்பினாலும் கண்களில் 'வாரிசு' போஸ்டர் தான் தென்படுகிறது, இதைவிட சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.  அந்த நிகழ்வில் என்னவெல்லாம் நடந்தது? விஜய் என்ன பேசினார்? என்று அனுதினமும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றனர்.

மேலும் படிக்க | கமல்ஹாசனுடன் நடிகை நதியா நடித்ததே இல்லை! ஏன் தெரியுமா?

'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நேரில் கண்டு ரசிக்க முடியாதவர்களுக்கென்று பிரத்யேகமாக சன் தொலைக்காட்சியில் புத்தாண்டு பண்டிகையன்று நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது.  ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக நடந்துவிட்டது, அடுத்ததாக அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்? வேறென்ன 'வாரிசு' படத்தின் ட்ரைலர் தான்.  ரசிகர்கள் பலரும் இப்படத்தின் ட்ரைலரை காண ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  அதன்படி 'வாரிசு' படத்தின் ட்ரைலர் 2023 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் வெளியாகியுள்ள சில தகவலின்படி, புத்தாண்டின் போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தொடர்ந்து ட்ரைலர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ட்ரைலர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.  'வாரிசு' படம் ஜனவரி 12ம் தேதியன்று வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு குழு இந்த தேதியை உறுதி செய்யவில்லை.  ஏனெனில் படம் அடுத்த வாரம் தான் தணிக்கை குழுவிற்கு செல்கிறது, தணிக்கை குழுவின் சோதனைக்கு பிறகு 'வாரிசு' படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியினை படத்தின் தயாரிப்புக்குழு அறிவிக்கும்.  விஜய்யின் 'வாரிசு' படத்தோடு அஜித்தின் 'துணிவு' படம் மோதவுள்ள நிலையில், 'துணிவு' படமும் அடுத்த வாரம் தான் தணிக்கை குழுவிற்கு  செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | The Teacher : விவாதத்தை கிளப்பும் 'தி டீச்சர்'... மிரட்டும் அமலா பால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News