இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் மாந்தையில் திருக்குறள் விழா...!

திருக்குறள் விழாவிற்கு திருவள்ளுவர் தோற்றத்துடன் வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2022, 01:32 PM IST
இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் மாந்தையில் திருக்குறள் விழா...! title=

இலங்கை, முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா இடம்பெற்றது.  உதவி பிரதேச செயலாளர் திரு.ம.ஜெபமயூரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. நிகழ்வில் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் தோற்றத்துடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டார்.  

திருவள்ளுவர் சிலைக்கான மாலை அணிவித்தல் நிகழ்வுடன்  ஆரம்பமாகிய நிகழ்வில் திருவள்ளுவர் சிலைக்கான மாலையினை திரு.க.லிங்கேஷ்வரன் (மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் - முல்லைத்தீவு) அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.  மங்கள விளக்கினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் செல்வி.ந. ரஞ்சனா ( பிரதேச செயலாளர் - மாந்தை கிழக்கு) ஏற்றிவைக்க, கௌரவ விருந்தினர்களும் ஏனைய விருந்தினர்களும் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றி இருந்தது.  

மேலும் படிக்க | எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் இலங்கை கடல் தொழிலாளர்கள்; இந்தியா உதவ வேண்டும் என கோரிக்கை

நிகழ்வில் ஆரணி நர்த்தனாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும் கரகாட்ட கலை நிகழ்வும் , மாணவர்களின் கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றன. இதே வேளை மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் விருந்தினர்கள் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News