UAE Golden Visa: விதிகளில் மாற்றம், அதிகரித்த நன்மைகள், விவரம் இதோ

UAE Golden Visa: "கோல்டன்" விசா எனப்படும் நீண்ட கால வதிவிட விசா, ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் வரை வசிக்கவும், வேலை செய்யவும், படிக்கவும் வெளிநாட்டு குடிமக்களை அனுமதிக்கும் ஒரு விசா ஆகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2022, 02:37 PM IST
  • அக்டோபர் 3 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை மற்றும் பார்வையாளர் விசாக்களுக்கான புதிய முறை அமலுக்கு வந்தது
  • கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே செலவழித்ததால், அவர்களுடைய விசா நிலை பாதிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • எந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கும் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஸ்பான்சர் செய்யலாம்.
UAE Golden Visa: விதிகளில் மாற்றம், அதிகரித்த நன்மைகள், விவரம் இதோ title=

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றவர்கள் இப்போது தங்கள் பெற்றோருக்கு 10 வருட ரிசிடென்சிக்காக ஸ்பான்சர் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது அக்டோபர் 3, 2022 முதல் நடைமுறைக்கு வந்த கணிசமாக விரிவாக்கப்பட்ட கோல்டன் விசா திட்டத்தின் ஒரு அம்சம் ஆகும். கலீஜ் டைம்ஸிடம் பேசிய அரேபியன் பிசினஸ் சென்டரின் (அமெர் சென்டர் - ஷேக் சயீத் சாலை) ஒரு செயல்பாட்டு மேலாளர், 10 வருட விசா வைத்திருப்பவரின் பெற்றோருக்கு தாங்கள் 10 வருட கோல்டன் விசாவை வழங்கியதாகக் கூறினார். முன்பு, இவை சாதாரண ரெசிடன்சி ஹோல்டர்களுக்கு வழங்கப்படுவது போல் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வழக்கமான UAE ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் Dh20,000 அல்லது $5,445.16 (USD) மற்றும் அதற்கு மேல் மாதச் சம்பளம் பெற்றால் அவர்களின் பெற்றோருக்கு ஸ்பான்சர் செய்யலாம். இந்த சம்பள முன்நிபந்தனையும், கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. கோல்டன் விசா ஏன் வாய்ப்பு விசா என்று அழைக்கப்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்ன? இந்த பதிவில் இதன் விவரங்களை காணலாம். 

கோல்டன் விசா என்றால் என்ன? அது ஏன் வாய்ப்பு விசா (visa of opportunity)என்று அழைக்கப்படுகிறது?

"கோல்டன்" விசா எனப்படும் நீண்ட கால வதிவிட விசா, ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் வரை வசிக்கவும், வேலை செய்யவும், படிக்கவும் வெளிநாட்டு குடிமக்களை அனுமதிக்கும் ஒரு விசா ஆகும். வசதி படைத்த தனிநபர்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் அனுமதி அல்லது குடியுரிமையைப் பெறுவதற்கு இந்த குடியேற்றத் திட்டம் உதவுகிறது. கணிசமான பங்களிப்பை வழங்குவதன் மூலமோ, முதலீடு செய்வதன் மூலமோ அல்லது ஒரு வீட்டை வாங்குவதன் மூலமோ அவர்கள் இந்த பங்களிப்பை அளிக்கலாம். கடந்த காலங்களில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே ஆறு மாதங்கள் தங்கியவர்கள் கோல்டன் விசாவை இழப்பார்கள் என்ற விதி இருந்தது. புதிய முறை வந்தவுடன், கோல்டன் விசா வைத்திருக்கும் நபர் எத்தனை காலம் அமீரகத்திலிருந்து வெளியே இருந்தாலும், கோல்டன் விசா செல்லுபடியாகும்.

மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ 

குழந்தைகளுக்கும், அவர்களது வயது எதுவாக இருந்தாலும், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஸ்பான்சர் செய்யலாம். எத்தனை வீட்டுப் பணியாளர்களுக்கு அவர்கள் ஸ்பான்சர் செய்யலாம் என்பதில் எந்தத் தடையும் இல்லை. கூடுதலாக, அவர்கள் இப்போது தங்கள் பெற்றோருக்கு 10 வருட காலத்திற்கு ஸ்பான்சர் செய்யலாம்.

விரிவுபடுத்தப்பட்ட கோல்டன் விசா திட்டம்

அக்டோபர் 3 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை மற்றும் பார்வையாளர் விசாக்களுக்கான புதிய முறை அமலுக்கு வந்தது. இது புதிய நுழைவு மற்றும் வதிவிட அனுமதிகளைச் சேர்த்தது, தற்போதைய தேர்வுகளை நெறிப்படுத்தியது மற்றும் புதிய வதிவிடப் பாதைகளையும் நிறுவியது. 

கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே செலவழித்ததால், அவர்களுடைய விசா நிலை பாதிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கும் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஸ்பான்சர் செய்யலாம். கூடுதலாக, அவர்கள் எவ்வளவு ஆதரவு ஊழியர்களுக்கு ஸ்பான்சர் செய்யலாம் என்பதில் எந்த தடையும் இல்லை.

நீண்ட கால ரெசிடன்சுக்கான குறைந்தபட்ச மாத ஊதிய அளவுகோல் Dh50,000 இலிருந்து Dh30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தகுதி வாய்ந்த நிபுணர்கள் விண்ணப்பிக்க உதவுகிறது. பின்வரும் துறைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன: மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிர்வாகம், சட்டம், கலாச்சாரம் மற்றும் சமூக அறிவியல்.

கோல்டன் விசா வைத்திருக்கும் இந்திய பிரபலங்கள்

மிக சமீபத்தில், பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற கோல்டன் விசா உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

நாசர், சஞ்சய் தத், மம்முட்டி, மோகன்லால், டோவினோ தாமஸ், பார்த்தீபன், அமலா பால் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசாக்களை வைத்திருக்கும் மற்ற இந்திய நடிகர்கள் ஆவர். இந்த நீண்ட கால குடியுரிமை விசா திட்டம் பல்வேறு தொழில்களில் சாதனை படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | NRI News: நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News