இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் நீக்கம்; அதிபர் புதிய அறிவிப்பு

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீக்கியுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 6, 2022, 07:29 AM IST
  • ஏப்ரல் 4 ஆம் தேதி அவசரநிலை அறிவிக்கப்பட்டது
  • எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு அதிபர் அறிவித்திருந்தார்
  • அவசரநிலை வாபஸ் பெறப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் நீக்கம்; அதிபர் புதிய அறிவிப்பு title=

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டார். முன்னதாக, இலங்கையில் மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரநிலையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த முடிவை ஜனாதிபதி ரத்து செய்து உத்தரவுயிட்டுள்ளார். இருப்பினும் இதற்கான சரியான காரணங்கள் என்ன என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இலங்கையின் பணவீக்கம்
பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருந்து, மண்ணெண்ணெய்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பு, தாள் பற்றாக்குறையால், குழந்தைகளின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்

அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கலாம்
மக்களின் கோபத்தை தணிக்க, பிரதமரின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது. பிரதமரின் மகனும் தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். இப்போது இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்படலாம் என்றும், அங்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் தீவிரப் பங்கேற்பைப் பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இலங்கையில் நீடித்து வரும் மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் தகவல் தொடர்பு வலையமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக கடன் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வருவதால், இலங்கை இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

श्रीलंका में बेहद खराब हुए हालात, प्रदर्शनों को देखते हुए राष्ट्रपति ने लगाई इमरजेंसी

கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது
கோவிட்-19 தொற்றுநோயால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. அதேசமயம், பாரியளவில் கடன் சுமத்தப்பட்டமையினால் இலங்கையின் பொருளாதாரத்தில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் தவறான முடிவுகளினால் நாடு இந்த நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பொதுமக்கள் நம்புகின்றனர். இதனால் நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களின் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 1ம் திகதி அவசரகால பிரகடன சட்டத்தை ஆளும் இலங்கை அரசு அறிவித்து, அமைச்சரைவையிலும் பல மாற்றங்களை கொண்டுவந்தது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வெளியான இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பில், ஏப்ரல் 5ம் திகதி நள்ளிரவில் இருந்து அவசர கால பிரகடன சட்டத்தை திரும்பப்பெறுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News