ஷார்ஜாவில், ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) நடந்துகொண்டிருக்கிறது. இதில் இந்தியர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமைக்கொள்ளக்கூடிய ஓரு விஷயம் ஹால் எண் 7-ல் உள்ளது. ஆம்!! இந்த அறையில் சாதனை படைத்த இரு நிறுவல்கள் உள்ளன. இந்த அறையில் உலகின் மிகப்பெரிய ஸ்க்ரூடிரைவர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அருகில் உலகின் மிக நீளமான கார்ட்டூன் துண்டு உள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்ஏ யூசுப்பின் உத்வேகம் தரும் கதையை சித்தரிக்கும் வகையில் உள்ளது.
இந்த கின்னஸ் உலக சாதனை படைத்த இரண்டு படைப்புகளும் வெளிநாடு வாழ் இந்திய தந்தை-மகள் இரட்டையர்களான எம் திலீஃப் மற்றும் ரோஷ்னா எம் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளன. "எங்கள் படைப்பை இங்கு காட்சிப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று 20 வயதான ரோஷ்னா கூறினார். 2021 இல் ரோஷ்னா மிக நீளமான கார்ட்டூன் துண்டுக்காக தான் படைத்த சாதனையை அவரே இப்போது முறியடித்தார். 430 மீ அளவுள்ள, 'தி பில்லியன் டாலர் ஜர்னி' என்ற தலைப்பில் புதிய துண்டு இரண்டு சக்கரங்கள் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கைப்பிடியைச் சுழற்றி இதை படிக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை, கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்திய தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலி, ஸ்டாலுக்குச் சென்று ரோஷனின் முயற்சிகளைப் பாராட்டினார்.
உலக சாதனைகளை படைப்பதை ஒரு பொழுபோக்காகவே கொண்டிருக்கும் ரோஷ்ணாவின் தந்தை எம்.திலீப், இது தனது மூன்றாவது கின்னஸ் உலக சாதனை என தெரிவித்தார். இட நெருக்கடி காரணமாக, ஸ்க்ரூடிரைவரின் தலைப்பகுதியை மட்டுமே தன்னால் காட்சிக்கு வைக்க முடிந்ததாக அவர் கூறினார். மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்ட இந்த கருவியின் நீளம் 6.6 மீ ஆகும். இந்த கலைஞருக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: லாட்டரியால் மாறிய வாழ்க்கை
மிக நீளமான கார்ட்டூன் துண்டு
தற்போது செய்யப்பட்டுள்ள கார்ட்டூன் துண்டு, தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் உள்ளது. கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் கழிந்த அவரது குழந்தைப் பருவம் முதல், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களில் ஒருவராக அவரது அசாத்திய முன்னேற்றம் வரையிலான பயணத்தை இது விளக்குகிறது.
தான் அவரிடமிருந்து பல உத்வேகங்களை பெற்றுள்ளதாக ரோஷ்ணா கூறினார். "நான் ஒரு தொழில்முனைவோராக இருக்க விரும்புகிறேன்; அவர் எனது முன்மாதிரி, எனவே அவரை கௌரவிக்க ஏதாவது செய்ய விரும்பினேன்." என்று அவர் தெரிவித்தார்.
குளோபல் வில்லேஜ் நிறுவனத்துடன் இணைந்து 404 மீட்டர் நீளமுள்ள கார்ட்டூன் ஸ்ட்ரிப்பை உருவாக்கி ரோஷ்னா 2021 ஆம் ஆண்டு தனது முதல் உலக சாதனையை செய்தார். இந்த ஆண்டு அந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். சமீபத்தில் நுண்கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், கார்டூன் ஸ்ட்ரிப்பை உருவாக்க தனக்கு 8 மாதங்கள் ஆனது என்றும், அதில் ஐந்து மாதங்கள் ஆராய்ச்சிக்காக மட்டுமே தான் எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்.
தானும் தனது குழு உறுப்பினர்களும் ஏதாவது செய்து தங்கள் தடத்தை பதிக்க விரும்பியதாக அவர் தெரிவித்தார். என்ன செய்யலாம் என யோசிக்கும்போது அவர்களுக்கு இந்த எண்ணம் வந்துள்ளது. தனது குழு உறுப்பினர்கள் இதில் தனக்கு உதவியதாகவும், முழு ஆராய்ச்சி செயல்முறையிலும் கார்ட்டூன் துண்டு வரையும்போதும் அவர்கள் தனக்கு உதவியதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய NRI-கள் தேர்ந்தெடுக்கும் டாப் நகரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ