கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் பகுதியில் பெண் யானை ஒன்று நாட்டுவெடிகுண்டு வெடிப்பில் சிக்கி பலத்த காயங்களுடன் அவதிப்பட்டு வருகிறது!
கோவை மாவட்டம் நரசிபுரம் பகுதியில் பெண் யானை ஒன்று பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக வாயில் ஏற்பட்டுள்ள காயத்துடன் சுற்றிதிரிந்த இந்த யானை இன்று அப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவயிடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
50 year old female elephant is critically injured after she fell into a muddy pond in Narasipuram village in Coimbatore. Attempts are being made by the forest department officials to rescue the animal. #TamilNadu pic.twitter.com/wYj7AG74VA
— ANI (@ANI) May 7, 2018
நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிகிறது. அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நாட்டுவெடிகுண்டை கடித்துள்ள பாதிக்கப்பட்ட யானை வாயில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட யானையினை மீட்டுள்ள வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விரைவில் குணமாகிவிடும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!