ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
வீர மரணம் அடைந்த வீரர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி பகுதியைச்சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் சிதராம் உபத்யாய் (வயது 28) என்பதாகும். இவருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் அத்துமீறலால் எல்லைப் பகுதியில் 3-கி.மீதொலைவில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
One #BorderSecurityForce (BSF) soldier was killed during a ceasefire violation from across the border in #JammuAndKashmir 's R S Pura Sector
Read @ANI Story | https://t.co/FmX2HTsFzQ pic.twitter.com/0KRONLhPQu
— ANI Digital (@ani_digital) May 18, 2018
Photo of BSF Constable Sitaram Upadhyay, who lost his life in ceasefire violation by Pakistan in RS Pura sector of #JammuAndKashmir. He hails from Jharkhand & is survived by a three-year-old daughter and a one-year-old son. pic.twitter.com/ViHqGi5Rzc
— ANI (@ANI) May 18, 2018
Two civilians injured in ceasefire violation by Pakistan in RS Pura sector undergoing treatment at a hospital. RC Kotwal, Superintendent of Police, says, 'shelling is underway. Administration will provide best possible help to civilians' #JammuAndKashmir pic.twitter.com/F5eQ2w260q
— ANI (@ANI) May 18, 2018